' தேவனின் வல்லமை THE POWEROF GOD 55-10-06E சிகாகோ இலினாய்ஸ் அமெரிக்கா வில்லியம் மரியன் பிரன்ஹாம் தேவனின் வல்லமை THE POWER OF GOD 55-10-06E சிகாகோ இலினாய்ஸ் அமெரிக்கா உங்களை ஆசீர்வதிக்கிறேன். நாம் ஜெபம் செய்வோமா. எங்கள் பரலோகத் தகப்பனே, அவருடைய இரத்தம் எல்லா அசுத்தங்களிலிருந்தும் நம்மைச் சுத்திகரித்து, இந்த நல்ல நேரத்தில் எங்களை ஒன்றிணைக்கும் அதே வேளையில், நாம் ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்படுவதற்காக, பூமிக்கு வந்து மரித்த தேவனுடைய குமாரனாகிய இயேசுவுக்காக இன்றிரவு உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்றிரவு அவர் நம்மைப் பார்த்து புன்னகைத்து அவருடைய ஆசீர்வாதங்களைத் தருவார் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். அமர்ந்திருக்கலாம். நன்றி, சகோதரர் ஜோசப். அத்தகைய பாராட்டுக்கு நான் தகுதியற்றவன். ஆனால் அது எனக்குத் தெரியும் ...நான் உலகத்தை விட்டு கடந்து செல்லும்போது கர்த்தர் என்னைப் பற்றி நன்றாக நினைப்பார் என்று நம்புகிறேன். நன்றி, சகோதரர் ஜோசப். நீங்கள் அனைவரும் எனக்காக ஜெபியுங்கள். நண்பர்களே, உங்கள் நல்ல பாராட்டுக்கு நன்றி.....?...... 2. ஒருமுறை, நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன், வெளியே சென்றேன், ஒரு ... யாரோ ஒரு சகோதரர், "ஓ, சகோதரன் பிரான்ஹாம், நான் உண்மையிலேயே அதை பாராட்டினேன்" என்றார். அங்கே ஒரு சக நண்பர் நின்றார்; அவர் கூறினார், "உங்களுக்கு தெரியுமா, ஜனங்கள் என்னை பற்றி அப்படிச் சொல்வதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்." என்று சொன்னார், ஜனங்கள் அப்படி சொல்வதை நான் விரும்ப மாட்டேன். அவர்கள் என்னை பெருமை பாராட்டுவதை நான் விரும்பவில்லை. நான் சொன்னேன், "நான் செய்கிறேன்." நான் சொன்னேன், "உங்களுக்கும் எனக்கும் இடையில் ஒரு வித்தியாசம் இருக்கிறது; நான் அதைப் பற்றி நேர்மையாக இருக்கிறேன்." அது சரியானது என்று நான் நினைக்கிறேன். நாம் அனைவரும் யாராவது நல்ல ஒன்றைச் சொல்ல விரும்புகிறோம், இல்லையா? ஆமாம். ஆனால்... நாம் அவரை எவ்வாறு நேசிக்கிறோம் என்று சொல்ல இயேசு விரும்புகிறார் என்று நான் நம்புகிறேன். நீ நினைக்கவில்லையா? அது சரி. 3. நன்றி. இன்றிரவு நான் கொஞ்சம் சோர்வாக இருக்கிறேன். இன்று பிற்பகல் எங்களுக்கு ஒரு ஆராதனை இருந்தது, அதனால் நாங்கள்... இப்படி எட்டு நாட்களாக தொடர்ந்து ஆராதனைகள் நடந்து வருகின்றன. எனவே இது... நான் கொஞ்சம் சோர்வாக இருக்கிறேன், அதிகம் இல்லை, ஆனால் நான் அதை நன்றாக உணரும் வரை போதுமானது. நான் இரவில் தூங்கவில்லை அதுதான். எனக்கு போதுமான தூக்கம் இல்லை. அதுதான் எனக்கு சிறிது தடங்கலாக உள்ளது. இப்போது, எல்லோரும் இன்றிரவு அவரை முழு இருதயத்தோடும் அவரை நேசியுங்கள். [சபையார் "ஆமென்." கூறுகின்றனர்] ஆமென். அதுதான் வழி; அது நேர்த்தியாக உள்ளது. இப்போது, திருமதி பிரான்ஹாம் நாளை இரவு, வெள்ளிக்கிழமை இரவு, வரக்கூடும் என்று நான் நம்புகிறேன்; அவள் வருவார்களா, இல்லையா என்று நிச்சியமாக சொல்லமுடியாது. மற்றும் அவள் வரும்போது, ஜோஸப்பை அழைத்துக் கொண்டு வருவாள், என்று நம்புகிறேன்.........?.......... 4. சிறிய யோசேப்பு பிறப்பதற்கு சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, நான் மினியபோலிஸ் (Minneapolis) என்னும் இடத்தில் ஜெபித்து கொண்டு இருந்தேன். நான் யோசேப்பின் ஜீவியத்தை பற்றி வாசித்துகொண்டிருந்தேன். அவன் என்னே ஒரு அற்புதமான மனிதன். மற்றும் அங்கே.......எனது துணிகள் தொங்கிக்கொண்டிருந்த ஒரு சிறு அறைக்கு சென்றேன். நான் அந்த கதவுகளை ஒன்றாக பூட்டினேன். நான் இந்த யோசேப்புக்காக தேவனை துதித்துக் கொண்டு, அழுது கொண்டிருந்தேன். ஏதோவொன்று, ஒரு தரிசனம் அல்ல, மாறாக ஏதோவொன்று என்னிடம், "உனக்கு ஒரு குமாரன் இருப்பான், அவனுக்கு யோசேப்பு என்று பேரிடுவாயாக" என்று இப்போதுதான் என்னிடம் கூறியது. ஆகையால் நான் நினைத்தேன். "நல்லது, அது இப்பொழுது அருமையாக உள்ளது, தேவனே உமக்கு நன்றி." ஆகையால் நான் அதை பற்றி ஜனங்களிடம் கூற ஆரம்பித்தேன். நல்லது, உடனே சுமார் ஒருவருடம் கழித்து ஓ, ஒரு சிறு குழந்தை எங்கள் வீட்டில் பிறந்தது. அது வரும்போது சிலர், "இது தான் யோசேப்பா?" என்று கேட்டார்கள். நான் சொன்னேன், "எனக்கு தெரியாது." அதை பற்றி சொல்ல முடியாது, ஏனென்றால் எங்களுடைய மற்றொரு குழந்தை, பெண் குழந்தையாக நான்கு வருடம் கழித்து பிறந்தது. ஆகையால் இந்த குழந்தை பிறந்தவுடன் அது ஒரு சிறு பெண் குழந்தையாக இருந்தது. அப்புறம் என்னுடைய சகோதரர்கள் என்னை கிண்டல் செய்வதை பற்றி பேசவா வேண்டும்? அவர்கள், "எல்லா நேரமும் அது சரியாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம் பில்லி." என்றனர். நான் சொன்னேன், "அதை பற்றி கவலைபடாதீர்கள். அவன் இங்கே இருப்பான்." சொன்னார்கள், "ஓஹ, மேடாவுக்கு முப்பத்து ஐந்து வயதாகிறது, மற்றும் ஒவ்வொரு முறையும் ஆபரேஷன் பண்ணி எடுக்க வேண்டியுள்ளது. "அது இங்கே இருக்கும் என்று எனக்குத் தெரியும் என்று சொன்னேன்." நான் சொன்னேன், "நிச்சியமாக." "நீங்கள் அதை நிச்சயமாக சொல்கிறீர்களா" என்று சொன்னார்கள். நான் சொன்னேன், "அதை பற்றி முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்." நான் சொன்னேன், "தேவன் எப்பொழுதுமே உண்மையை தான் சொல்லுவார். எனக்கு ஒரு குழந்தை பிறக்கும், அவனுக்கு யோசேப்பு என்ற பெயர் இருக்கும்." மற்றும் அவர்கள், "அது அப்படி இருக்காது" என்று சொன்னார்கள். இரண்டு வருடம், ஒரு வருடம் கடந்து சென்றது, இரண்டு மூன்று நான்கு என்று ஐந்தாவது வருடத்திற்குள் சென்றுகொண்டிருந்தோம். இல்லை, இல்லை, யோசேப்பு இன்னும் வரவில்லை. சிறிது சமயம் கழித்து, யோசேப்பு வந்துகொண்டிருக்கும் போது நான் மருத்துவமனையில் இருந்தேன், எனது மனைவியோ மேலே அறையில் இருந்தாள். மற்றும் இதோ அந்த பணி பெண் கீழே வந்தாள். மற்றும் சிலர் சொன்னார்கள், "இது யோசேப்பு அல்லவா?" நான் சொன்னேன், "எனக்கு தெரியாது." நான் சொன்னேன், "யோசேப்பு வருவான் என்று எனக்கு தெரியும், ஆனால் எப்போது வருவான் என்று தெரியாது." நான் சொன்னேன், "அவன் இங்கு இருப்பான்." அந்த பணிப்பெண், கீழே படியில் இறங்கி வந்து, "மதிப்பிற்குரிய பிரன்ஹாம்" அவர்களே. நான் சொன்னேன், "சொல்லுங்கள்." "உங்களுக்கு அருமையான ஏழு பவுண்ட் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது" என்று சொன்னாள். நான் சொன்னேன், "யோசேப்பே நீ இங்கு வருவதற்கு அதிக நேரம் ஆகிவிட்டது, ஆனால் நீ வந்தது எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகிறது." நான் சொன்னேன்..........?......ஆகையால் நான்....... 5. தேவன் உங்களிடம் ஏதாவது ஒன்று சொல்வார் என்றால், அவரை நம்புங்கள். ஏனென்றால் அவர் - அவர் அதை செய்யப்போகிறார். பாருங்கள்? கவலைபடவே வேண்டாம். அது கொஞ்சம் நேரம் எடுக்கும், ஆனால் அவர் தன்னுடைய நல்ல நேரத்தில் செய்வார். அப்படி தானே? மற்றும் அதினால், நாம் அவரை நேசிக்கிறோம், ஏனென்றால் அவருடைய வாக்குத்தத்தங்களில் அவரை அப்படி தான் எடுக்க முடியும். அவர் என்ன சொன்னாரோ, அதை அவர் அப்படியே செய்து முடிப்பார். மற்றும் நாம் நம்முடைய முழு இருதயதோடே அதை நம்புவோம். இப்பொழுது, கீழே இங்கே - இந்த இசைக்குழு இருக்கும் இடத்தை பார்க்கும் போது, அதை அப்படித்தானே அழைப்பீர்கள்? [ஒரு மனிதன் "ஆம் நிச்சயமாக" என்று கூறுகிறார்.] அனேக இசை அமைப்பாளர்களை நான் கான முடியவில்லை. ஆனால் சிலர் ஒலி நாடாக்களை எடுப்பதை பார்க்கிறேன். இங்கே இருக்கும் என்னுடைய சகோதரர்களாகிய லியோ மற்றும் ஜீன், உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் பல் புடுங்கப்பட்டத்தால், வாயில் புண் ஏற்பட்டுள்ளது என்று கேள்விப்பட்டேன். நல்லது அது இப்போது சுகமாகிக்கொண்டு வருவதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அது அருமையாக உள்ளது. நல்லது. தேவனை ஆராதித்து கொண்டிருக்கிற இந்த இரவு நேரத்தில் தேவன் நம் மீது இரக்கம் புரிவாராக. 6. மற்றும் நான் வேதாகமத்தில் இருந்து வாசிக்க விரும்புகிறேன். நேற்று இரவு மீட்பின் புத்தகத்திலிருந்து, கொடுத்த செய்தியில் விட்ட இடத்திலிருந்து, நமது ஆராதனையை தொடர்வதற்கான இடம் உள்ளது. மற்றும் சனிக்கிழமை தான் காலை உணவு என்பதை புரிந்து கொண்டேன். மற்றும் - மற்றும் ஞாயிற்று கிழமை எனது தம்பி சகோதரன் டாமி ஹிக்ஸ் (Tommy Hicks) அவர்கள் இங்கே பேச இருக்கிறார்கள். அது சரிதானே? மற்றும் நீங்கள் எல்லோரும் டாமியுடன் இருப்பதில் கொண்டாடுவீர்கள், காரணம் அவர் இப்பொழுது தான் ரஷ்யாவில் இராணுவத்திலிருந்து வந்திருக்கிறார். மற்றும் அதை பற்றியதான வினோதமான காரியம் என்னவென்றால். அவர் அங்கே செல்லவிருக்கிறேன் என்று சொல்லும் போது, நாம் எல்லோரும் அந்த கிறித்தவ வர்த்தக குழுவின் காலை உணவில் இருந்தோம். மற்றும் அவர், ரஷ்யாவுக்கு செல்வதாக சொன்னார். மற்றும் திரு ஃபிஷர் (Fisher) இப்போது இங்கு, எங்கேயோ உட்கார்ந்து கொண்டு இருக்கலாம். அவர் இந்த கிறித்தவ வர்த்தக குழுவிற்கு வழக்கறிஞர். பழைய அசுசா தெருவின் துவக்க காகால பெந்தேகோஸ்தே அனுபவத்தில் உள்ள, இந்த நாடு முழுவதும் எல்லோராலும் பாராட்டப்பட்ட ஒரு அருமையான மனிதர். மற்றும் திரு ஃபிஷர் ஒரு செய்தியை கொடுத்தார். அவர் சொன்னார், "நல்லது அவர் அங்கு செல்வார் என்று சொன்னார்," நான் - நான் நம்புகிறேன்." மற்றும், "நல்லது ஏன் திரு ஃபிஷர் என்று அவர் கேட்டார்." அவர் சொன்னார், "நல்லது, முதல் காரியும் என்னவென்றால், "ரஷ்யர்கள்......உள்ளே வருவதற்கு அனுமதிப்பார்கள், பின்பு யார் நிஜமாகவே கிறிஸ்தவர்கள் என்றும், கிறிஸ்தவரல்லாத கம்யூனிஸ்டுகள் யார் என்பதை கண்டுப் பிடிப்பார்கள்." மற்றும் சொன்னார்கள் "மற்றுமொரு காரியம், அவர்கள் சொல்வார்கள், பாவம் சிறு பையன், ஒரு பிரச்சனையும் இங்கு செய்ய மாட்டான்." ஆகையால் அவனை உள்ளே அனுமதித்தனர். ஆகையால், அவர்கள் _ அவர்கள் அதை செய்தனர். ஆனால் நான் கற்பனை செய்து பார்க்கிறேன், அவன் அவர்களுக்கு தீங்கு செய்திருக்கிறான். ஏனென்றால் அவர் - அவர் சுவிசேஷத்தின் பிரசங்கியார், மற்றும் அவர் ஒரு நல்ல மனுஷனும் கூட. ஆகையால் அவர் அங்கு இருந்ததற்காக நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். இப்பொழுதும் அந்த விநோதமான காரியம் என்னவென்றால், நான் கொஞ்சம் என் கழுத்தை நீட்டி, "இப்போதும் டாமி நீங்கள் அங்கு சென்று திரும்பி வந்தவுடன் நான் அங்கு செல்வேன்." என்று சொன்னேன். ஆகையால் இப்போது எனக்கு தெரியாது. நான் அதில் உள்ளேன். ஆகையால் நான் _ நான் அங்கு செல்வதற்கு விருப்பம். சரியா. ஆனால் அங்கு சென்றவுடன், எனக்கு _ எனக்கு அது தேவனுடைய வழி நடத்துதலாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். 7. ........?........இப்போதும், சுவிஷேச புத்தகத்திலிருந்து...........யாத்திராகம புத்தகத்திலிருந்து, 14 ஆம் அதிகாரத்தில் வாசிக்கலாம். இங்கு 13 அதிகாரத்தின் கடைசி பகுதியை மிகவும் பிடிக்கும், அக்கினி ஸ்தம்பம், அக்கினி ஸ்தம்பம் இஸ்ரவேல் ஜனங்களை இரவும் பகலும் நடத்தி சென்றது. பகல் நேரத்தில் அது ஒரு மேகம் போல காணப்பட்டது, இரவு நேரத்தில் அது ஒரு அக்கினி ஸ்தம்பமாக இஸ்ரவேலரை நடத்தி சென்றது. மற்றும் அது தான் உடன்படிக்கையின் தூதன், அது இயேசு கிறிஸ்துவை தவிர வேறு யாரும் இல்லை, அவர் மரியாளின் கர்ப்பதில் மாம்சத்தில் வருவதற்கு முன்னாள் அவர் அப்படி வந்தார். அது கிறிஸ்து. மோசே கிறிஸ்துவை பின்பற்றினார். கிறிஸ்து சொன்னார், மோசே அவருடன் வனாந்திரத்தில் இருந்தார் என்று வேதாகமம் சொல்கிறது. அதினால் தான் அவர் யார் என்பதை அறிகிறோம் அவர் உடன்படிக்கையின் தூதன். மற்றும் இப்போது, 15 ஆம் வசனத்தில், இப்படியாக வாசிக்கிறோம். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு. எனக்கு அதை பிடிக்கும். உங்களுக்கும் அப்படித்தானே. தேவன் தாமே அவருடைய வார்த்தைக்கு அவருடைய ஆசீர்வாதத்தை கூட்டுவாராக. 8. இப்போது, இன்றிரவு வாரத்தின் நடுப்பகுதி, இன்றிரவு பிரார்த்தனை அட்டைகளை வைத்திருந்த அனைவரையும் அழைக்கப் போகிறேன். ஆனால் நான் இங்கே தொடங்கிய பிறகு, நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன், நான் மேலே சென்று நோயுற்றவர்களுக்கு வழக்கமான ஆராதனை செய்வேன் என்று நினைக்கிறேன். ஒருவேளை நாளை இரவு, தேவன் விரும்பினால், பிரார்த்தனை அட்டை பெற்ற அனைவருக்கும், நாளை இரவு பிரார்த்தனை செய்ய விரும்புகிறேன். சகோதரர் மூர் என்னிடமும் சகோதரர் பிரவுனிடமும் கூட சொன்னார், நாங்கள் முதலில் தொடங்கிய வழி இதுதான்; அதற்கு அவர்கள், "சகோதரன் பிரான்ஹாம், நாங்கள் மேடைக்கு வந்து உங்களுக்கு உதவுவோம்" என்றார்கள். 8. நான் அந்த விதமான ஆராதனைக்கு செல்ல அவர்கள் எப்பொழுதுமே ஆர்வம் கொண்டிருந்தனர். நானும் அதே விதமாக ஆர்வம் கொண்டிருக்கிறேன். அது சிறிது நேரத்திற்கு விநோதமாக தான் இருக்கும். ஆனால், அது இப்போது இருக்கிறதை காட்டிலும் வெகு அதிகமாக செயல்படும். அதினால் நாளை யார் யாரிடமெல்லாம் ஜெப அட்டை இருக்கிறதோ அவர்கள் அனைவரும் இந்த மேடைக்கு அழைக்க படுவார்கள். ஜெப அட்டை அவர்கள் எல்லாருக்கும் கிடைத்து விட்டது என்று நான் நம்புகிறேன். சில நிமிடங்களுக்கு முன்னாள் அந்த பையனிடம் கேட்டேன் சகோதரர்களே, ஏதாவது ஜெப அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளதா? "ஏற்கனவே 200 கொடுத்தாயிற்று என்று அவர்கள் சொல்லுகின்றனர்." "I" மற்றும் "K" மற்றும் சொன்னேன், அந்த கடிதத்தில் உள்ள சிலரை நான் இன்று இரவில் கூப்பிட வேண்டும் என்றால், சிலரை கூப்பிடுவேன். மற்றும் நாளை இரவு எல்லோருக்காகவும் ஜெபிப்போம். 9. இப்போது, சென்ற இரவில் யாத்திராகமம் புத்தகத்தில் இருந்து நாம் அனேக வேதாகம கருத்துக்களை பேசிக்கொண்டு இருந்தோம். நாம் "யாத்திராகமம்" என்றால், "வெளியே அழைக்க படுதல்" என்று அர்த்தம் கொள்ளும் என்று கண்டுபிடித்தோம். தேவன் அவிசுவாசிகளிடமிருந்து தம் ஜனத்தை வேறு பிரிக்க படுதல். மற்றும் அதற்கு பிறகு, அவர் அழைத்து கொண்ட ஜனங்கள் ஒரு பலதரப்பட்ட இனமாக இருந்தனர் என்று நாம் வேதாகமத்தில் பார்க்கிறோம். மற்றும் அது தான் ஒரு உண்மையான விசுவாசியை பிரச்சனைக்குள் கொண்டு சென்றது. ஏனென்றால் அது ஒரு கலப்பட கூட்டமாக இருந்தது. அவர்கள் தான் காதனிகளை உருக்கினவர்கள், மேலும், ஒரு கன்று குட்டியை செய்தவர்கள், மற்றும் எகிப்துக்கு செல்லவேண்டும் என்றவர்கள். இப்போது இந்த - அபார வளர்ச்சிக்கு பிறகு, கர்த்தருடைய அதிசயம் நடை பெற்றது. மற்றும் எல்லோரும் பின்தொடர்ந்து, மற்றும் அதற்கு பிறகு ஒரு கலப்பட கூட்டம் பின்தொடர்ந்தது. காரணம் அவர்கள்.......சென்று கொண்டிருந்தனர். அவர்கள் விருத்தசேதனம் பண்ணியிருந்தனர். பஸ்காவை அனுசரித்தனர். மற்றும் அது போன்ற காரியம் செய்தனர், ஆனால் அவர்கள் இன்னும் ஒரு கலப்பட கூட்டமாக இருந்தனர்: அவிசுவாசிகளுடன் விசுவாசிகள். முடிவிலே அது அவர்கள் மேல் காண்பித்தது. இப்பொழுது, நாம் மூன்று சிறந்த தத்துவங்களை பற்றி பேச இருக்கிறோம். மற்றும் அந்த.......மற்றும் இந்த யாத்திராகம புத்தகம், தனியே, பிரித்தெடுக்கபட்டு மற்றும் மீட்பின் புத்தகமாகவும் உள்ளது. மற்றும், நாம் பேசவிருக்கும் மூன்று தத்துவங்கள் என்னவென்றால், சாத்தானின் வல்லமை, விசுவாசத்தின் வல்லமை, தேவனின் வல்லமை. 10. மற்றும், நேற்று இரவு, சாத்தானுக்கு வல்லமை உண்டு என்று கண்டுக்கொண்டோம், மற்றும் அது மரணத்துக்கு ஏதுவான வல்லமை. மற்றும் மரணத்துக்கு பின்னால், சாத்தானால் ஒன்றும் செய்ய முடியாது. மரணத்துடன் அவன் முடிந்தான். மோசே பிறக்க போகிறான் என்று அறிந்து, எப்படி அவன்.............கொண்டு வந்தான். ஏன் அவன் அந்த சிறு குழந்தைகள் எல்லோரையும் கொன்றான்? மற்றும் தேவனுடைய ஊழியக்காரன் ஒரு தேர்ந்தெடுக்கபட்ட பாத்திரம் என்று அறிந்திருந்தும் அவன் தலையை ஏன் துண்டிக்க முற்பட்டான். நீதியின் வித்தானது ஆபேல் வம்சத்தின் மூலமாக வரும் என்று அறிந்து, அதே மாதிரியே அவன் ஏன் ஆபேலுக்கு செய்தான். நிச்சயமாக தேவன் அவன் இடத்தில் சேத்தை கொண்டு வந்தார். மேலும் நாளாகம புத்தகத்திலும் மற்றும் மத்தேயூவிலும் எப்படி அந்த ராஜரீக வித்துவாகிய இயேசுவை கொல்வதற்காக எல்லா குழந்தைகளையும் வெட்டி போட்டு, தேவனுடைய திட்டத்தை நிறுத்த முற்பட்டான். ஆனால் தேவனுடைய திட்டத்தை எப்படியாகிலும் நிறுத்துவதற்கு அவனால் எந்த வழியும் இருக்கவில்லை. இங்கே சமீபமாக ஒரு அறிக்கை இட்டனர். அதில் நீங்கள் இனி மேல் கூச்சல் இடக்கூடாது, மேலும் இவை எல்லாம் காங்கிரஸ் கூட்டத்தில் செலுத்தப்படும், அவர்கள் சொன்னார்கள், "இப்போதும் எல்லா தேசங்களுக்கும் மிருகத்தின் முத்திரையை கொண்டுவருவதற்கு, உலகின் எல்லா சபைகளும் ஒன்று கூடுகையில், எல்லா ஜனங்களும் ஏதோ ஒரு ஸ்தாபனத்தில் இணைந்து கொள்ளாவிட்டால், எல்லா கதவுகளும் அடைக்கப்படும். எப்போது எல்லோரும் ஒன்று கூறுகிறார்களோ அப்பொழுது எல்லா கதவுகளும் பூட்டப்படும். மற்றும் அதை அவர்கள் எப்போதாவது செய்வார்கள். மற்றும் இந்த சபை கூட்டுக்குள் இருக்கும் ஏதாவது ஒரு ஸ்தாபன சபைக்கு ஒவ்வொருவரும் சேராவிட்டால், மிருகத்தின் முத்திரையை தரித்து கொள்ள வேண்டும். மற்றும் இப்படி செய்தால் நல்லது, இந்த தெய்வீக சுகமளிக்கும் காரியங்களும், மற்றும் சபைகள் ஏற்றுக்கொள்ளாத இது போன்ற எல்லா காரியங்களும் நிறுத்தப்படும் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் அவர்களால் அதை செய்யவே முடியாது; உங்களால் அதை செய்யவே முடியாது. எப்படி உலக சபைகள் நடக்கிறதோ அதே போல தேவனுடைய சபையும் நடக்கும். சொன்னார் " பாதாளத்தின் வாசல்கள் மேற்கொள்வதில்லை" எல்லா பாதாளத்தின் கதவுகளும், பாதாளத்தின் எல்லா வல்லமைகளும் அதற்கு விரோதமாக இருந்தாலும் அதை ஒரு போதும் மேற்கொள்ள முடியாது. தேவன் தம்முடைய சபையினுடன் சரியாக செயல்படுவார். அது எப்பொழுதுமே அப்படிதான் இருக்கும். 11. அவைகளை சிங்கங்கள் சாப்பிடவில்லை. மற்றும் இந்த பழமை வாய்ந்த மதத்தை அழிப்பதற்கு அவர்கள் எவ்வளவோ காரியங்களை செய்ய முயற்சித்தனர். ஆனால் இயேசு வரும் வரைக்கும் அது நன்றாக இருக்கும். ஆமென். ஆகையால் அதை நிறுத்துவதற்கு எந்த வழியும் இல்லை. சாத்தான் ஒரு சாமார்தியமான நுண்ணறிவுள்ள ஒருவன். சரியா. மற்றும் அவன் மரணத்தின் வல்லமையை தன்னுடன், தூக்கி செல்பவன். ஆனால் மரணத்தை எட்டும் தூரம் வரைக்கும் தான் அவனால் செல்ல முடியும். ஆனால் அதற்கு பிறகு, விசுவாசம் அடியெடுத்து வைத்தது என்று நாம் பார்க்கிறோம். மரணத்தின் தருவாயில் விசுவாசம் அடியெடுத்து வைத்து உயிர்த்தெழுந்த தேவனை கண்டுகொண்டது. நாம் நமது அன்புள்ளவர்களை கல்லறையில் அடக்கம் செய்யும் போது, நமது கன்னங்களில் இருந்து கண்ணீர் விழ, மற்றும் எனது மனைவியை போல துக்கத்தோடு அந்த குழந்தையை கரங்களில் ஏந்திகொண்டிருக்கும் இளம் தாயை பார்க்கும் போது.......மற்றும் அங்கே எல்லோரும் நின்றுக் கொண்டிருப்பதாகவும் இருந்தாலும், மற்றும் அது என்னவாக இருந்தாலும், அது ஒரு பொருட்டே இல்லை. 12. அந்த நாளை நான் நினைத்து பார்க்கிறேன். பில்லி பால் சுமார் 18 மாத குழந்தையாக என்னை அணைத்துக்கொண்டு, அவனுடைய தாய் தன்னுடைய சிறு சகோதரியை கையில் ஏந்தியவாறு, கல்லறையில் கீழே இறக்கும் போது, நான் அவனை கையில் ஏந்திக்கொண்டு அங்கு நின்றதை நினைக்கிறேன். மற்றும் அந்த போதகர் ஒரு பிடி மண்ணை எடுத்து சொன்னார், "சாம்பலுக்கு சாம்பலும், புழுத்திக்கு புழுதியும், மண்ணுக்கு மண்ணும்" அந்த மண் கட்டிகள் என் மனைவி மீதும், குழந்தை மீதும் விழும் சத்தத்தை கேட்ட போது, ஓ என்ன, என் இதயம் கிழித்து கொண்டிருந்தது. ஆனால் அங்கு நின்று கொண்டு இருக்கையில் அந்த ஊசி இலை காடுகளிலிருந்து ஒரு பாடல் தொனிக்கும் சத்தத்தை கேட்டேன். ஆற்றுக்கு அப்பால் ஒரு தேசம் உண்டு. பாருங்கள்? சரியாக மரணத்தின் நடுவில், சாத்தான் என்ன செய்தான் என்று நான் பார்த்தேன், சற்று அப்பால் உயிர்த்தெழுதல் நடப்பதை நான் பார்த்தேன். "நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாய் இருக்கிறேன்." என்று ஆண்டவர் சொன்னார். "என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். யாராக இருந்தாலும்............" அது என்னவாக உள்ளது? அது விசுவாசம். நான் அங்கே சென்று சொன்னேன் "கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் தேனே; உங்களுடைய ஆத்துமாக்கள் சமாதானத்துதடன் இளைப் பாறட்டும். மற்றும் என்றோ ஒரு நாளில் நான் மீண்டும் உங்களை பார்ப்பேன்." ஆமென். 13. சமீபத்தில் நானும், பில்லியும் கொஞ்சம் பூக்களை எடுத்துகொண்டு அவனுடைய தாயின் கல்லறைக்கு எடுத்துகொண்டு சென்றோம். அவன் ஒரு சிறு பையனாக இருந்தான். அவனுக்கு எட்டோ அல்லது ஒன்பது வயது இருக்கும். அவன் கல்லறைக்கு வந்து அழ தொடங்கினான். அது அதிகாலை நேரமாக இருந்தது. அவன் அந்த பூக்களை கீழே வைத்து, தன்னுடைய தொப்பியை கையில் வைத்துக் கொண்டு அந்த கல்லறை அருகில் முட்டிபோட்டு அவன் தலையை என் மீது வைத்து அழ ஆரம்பித்தான். அவன் "அப்பா, என்னுடைய அம்மா அங்கே படுத்திருக்கிறாள் என்று சொன்னான்." நான் சொன்னேன் "இல்லை, இல்லை, ஹ, உன்னுடைய அம்மா அங்கே இருக்கிறார்கள் (பாருங்கள்) இங்கே இல்லை." நான் சொன்னேன், தேனே இங்கே நாம் பார்ப்பது, ஒரு மண் மேடு. பாரு, அது ஒரு மண் குவியல்." நான் சொன்னேன், "நான் அவளை ஒரு திடமான பெட்டியில் போட்டதால், அது உள்ளே விழாது, ஆனால் கடலுக்கு அப்பால், ஒன்று உள்ளது, அதனுடைய கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளது........மற்றும் அதனுடைய......மற்றும் மரித்தோரிடத்திலிருந்து உயிர்த்தெழுந்தவர் சொன்னார்" எவன் ஒருவன் என் வார்த்தையை கேட்டு, என்னை விசுவாசிக்கிறானோ, அவன் மரித்தாலும் பிழைப்பான். மற்றும் உயிரோடிருந்து, என்னை விசுவாசிக்கிறவன், மரிப்பதே இல்லை." நான் சொன்னேன், "அவர்கள் அவருடைய கரத்தில் பத்திரமாக இருக்கிறார்கள். ஆகையால் நாம் பார்க்கின்ற இந்த கரு மேகங்களுக்கு அப்பால், விசுவாசமானது உயிர்த்தெழுதலின் கன நேர கண்ணோட்டத்தை அப்பாலுள்ள தேவனிடம் இருந்து பார்க்கிறோம்." ஆகையால் கல்லறைக்கு அப்பால் ஒரு நம்பிக்கை எனக்கு உண்டு என்பதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மற்றும் விசுவாசமானது அந்த இடத்திற்கு நம்மை கொண்டு சேர்கிறது. ஒரு வேலை நான்........விசுவாசமானது அதனுடைய _ அதனுடைய இடத்தை தேவனின் வார்த்தையாகிய கன்மலையின் மேல் நிறுத்துவதால், நரகத்தின் அலைகள், அதின் அஸ்திபாரங்களின் மேல் அடிக்கையில், அது கழுகு பார்வையில், அதை பார்த்து மேகங்களுக்கு அப்பால் சென்று தேவனுடைய வாகுத்தத்தையும், உயிர்த்தெழுந்த தேவனை காணும். இன்று இரவு, நான் அதற்கு மிகுந்த நன்றி உள்ளவனாக இருக்கிறேன். மேலும் நீங்களும் அப்படிதான் இருப்பீர்கள் என்று தெரியும். மற்றும் ஒவ்வொரு விசுவாசியும் அப்படிதான் இருப்பார்கள். 14. நினைத்துப் பாருங்கள், நமக்கு திரைக்குள் ஒரு நங்கூரம் உண்டு. (ஆமென்) சில வேளைகளில் நமக்கு அது தெரியாது, ஆனால் அது அங்குதான் இருக்கிறது என்று தெரியும். அந்த சிறு பையன் பட்டத்தை விட்டு கொண்டிருப்பது போல அவர்கள் கேட்டார்கள், "பட்டம் எங்கே இருக்கிறது? அவன், எனக்கு பார்க்க முடியவில்லை." என்று சொன்னான். "அது அங்கு தான் இன்னும் இருக்கிறது, காரணம் எனக்கு அதை உணரமுடிகிறது." என்று சொன்னான். ஆகையால் அது சரி தான். நம்மால் அதை பார்க்க முடிவதில்லை, சில நேரங்களில், அது இருண்டு போகிறது. மேகம் அவருடைய ஆசீர்வாதமான முகத்தை மந்தரத்தினால் மறைக்கலாம். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், மேகங்கள் அவர் முகத்தை மறைக்கலாம் ஆனால் அவரை மறைக்க முடியாது. அது சூரியனை உங்களிடம் இருந்து மறைக்கலாம், ஆனால் அது மேகத்திற்கு அப்பால் இன்னும் பிரகாசித்துக்கொண்டு தான் இருக்கிறது. மற்றும் விசுவாசம் மேகத்துக்கு அப்பால் உள்ள சூரியனை பார்க்கிறது. மற்றும், இங்கே மோசேயின் தாயாருடைய விசுவாசத்தின் போராட்டம் சோதிக்கும்வன்னமாக உள்ளது. மற்றும் தேவனிடத்தில் வரும் ஒவ்வொரு பிள்ளையும் , ஒவ்வொரு புதல்வனும், முதலாவது சோதிக்க படவேண்டும். தேவன் உங்கள் விசுவாசத்தை சோதிக்கிறார். இப்போது தேவன் அந்த முழு காரியத்தையும், கண்டுகொள்ளாமல் இருபத்து போல இருக்கலாம், மற்றும் - எந்த வித சரியான வழியும் காட்டாமல், அதை அப்படியே வெட்டி விடுவார், ஆனால் அவர் உங்களுக்கு ஒரு சோதனை கொடுப்பது நல்லது. அதற்கு பிறகு அந்த சோதனையில் நீங்கள் இருக்கும் போது அவர் வருவார். எனக்கு அது பிடிக்கும், உங்களுக்கும் அப்படித்தானே? என்னுடைய வாழ்க்கையில் மிக பெரிய அனுபவம் என்னவென்றால், ஒரு மலை எனக்கு எதிராக வரும் போது, அதை தாண்டமுடியாமல், அதின் கீழ் செல்லமுடியாமல், அதை சுற்றி வர முடியாமல் இருக்கும் போது தான். மற்றும் சும்மா அப்படியே நின்றுவிடவும், கர்த்தர் அந்த மலையை நகர்த்தி போடுவார். மற்றும் அவர் கண்டிப்பாக அசைப்பார்......எவ்வளவு கருமையான மேகமானாலும் சரி, அது அவருக்கு ஒரு பொருட்டல்ல. சாத்தான் உங்களுக்கு முன் வைக்கும் ஒரு காரியத்தை, விசுவாசமானது அந்த கருமேகத்துக்குள் ஊடுருவி சென்று, அப்பால் அதை பார்க்கும் படியான கண்களை உருவாக்கும். காரணம் தேவன் நமது வெற்றி. ஆமென். 15. மரணத்திற்கு கூட திகில் இல்லை. அதனால் ஒரு விசுவாசி நிமிர்ந்து நின்று, "மரணமே உன் கூர் எங்கே, பாதாளமே உன் ஜெயம் எங்கே" என்று சொல்வதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் வெற்றி சிறக்க செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம். அந்த விசுவாசம் தான் வெட்கமடைய செய்யாது. அந்த விசுவாசம் தான் மேற்கொள்ள வைக்கும். மற்றும் இந்த தாயார் நமக்கு தெரிந்த மட்டில் தனது ஒரே குழந்தையை இல்லை மன்னிக்கவும், அது அவர்களுடைய ஒரே பிள்ளை கிடையாது. அவர்களுக்கு இன்னும் ஒரு குழுந்தை இருந்தது. பெயர் மிரியாம். ஆகையால் நாம்.......அந்த தாயார் தனது சிறிய குழந்தையை அந்த பிட்சு பூசிய நாணல் கூடையில், விசுவாசத்தின் அடிப்படையில் வைத்தாள். அது தேவன் வெளிப்பாட்டின் மூலமாக செயல்படுகிறார். 16. உங்களுக்கு தெரியுமா, ஜீவிக்கிற தேவனின் முழு சபையும் இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாட்டின் அடிப்படையில் தான் கட்டப் பட்டிருக்கிறது. ஏதேன் தோட்டத்தில், இஸ்ரவேல் ஜனங்களுக்கு பிற்பாடு..........என்னை மன்னிக்கவும். காயின், ஆபேலுக்கு பிற்பாடு அவர்கள் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளிய துரத்தப்பட்ட பிற்பாடு, காயின் (ஒரு கம்யூனிஸ்ட் கிடையாது) எப்படி தேவனை தொழுது கொண்டான் என்பதை நீங்கள் அறிவீர்களா, மற்றும் - மற்றும் ஒரு பலியை செலுத்தி, அவனால் முடிந்த எல்லாவற்றையும் செய்தான்..... காயின் மிகவும் பக்தி உள்ளவன். ஆனால் ஆபேல் வேலைப்பாடுகளால் வரவில்லை, அவன் விசுவாசத்தினால் வந்தான் என்று வேதாகமம் சொல்லுகிறது. அவன் தேவனுக்கு காயினை விட மிக சிறந்த காணிக்கையை செலுத்தினான். தேவன் அதற்கு சாட்சியாக இருந்தார் _ அவன் நீதிமானாக இருந்தான், ஏனென்றால் அவனுக்கு வெளிப்படுத்தப்பட்ட, தேவனுடைய நிகழ்வை கண்டிருந்தான்.......... இப்போது அவர்களுக்கு........இல்லை. வேதாகமம் அப்பொழுது எழுதப்படவில்லை. ஆகையால் அவனுடைய சகோதரன் காயின், தாயும், தகப்பனும் போதித்த ஒரேவிதமான போதனையை கேட்டு, கீழே வந்து, காணிக்கை செலுத்துவதற்காக பழங்களை எடுத்துக்கொண்டு வந்தான்.....ஆனால், பழத்தினால் தான் அவர்கள் ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளிய வந்தார்கள் என்று சில பேர்கள் நினைப்பது, அது பழங்கள் மூலமாக ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே வரவில்லை என்று ஆபேல், வெளிப்பாட்டின் மூலமாக அறிந்திருந்தான். அது பழத்தினால் அல்ல, ஆனால் அது அவன் தாயின் இரத்தம் அல்லது அவன் தகப்பன் தான் அவனுக்கு சாவை கொண்டு வந்தது. ஆகையால் அவன் ஒரு தெய்வீக வெளிப்பாட்டின் மூலம், ஒரு ஆட்டுகுட்டியின் இரத்தத்தை, காணிக்கையாக செலுத்தினான். யாருமே அதை பற்றி அவனிடம் ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் அவன் விசுவாசத்தின் மூலமாக தேவகுமாரன் வருவதை பார்த்து, ஒரு அடையாளமாக ஆட்டுக்குட்டியை காணிக்கையாக செலுத்தினான், உலக தோற்றத்திற்கு முன்பாகவே இயேசு அடிக்கப்பட்ட ஆட்டுகுட்டி என்பதை அவன் பார்த்தான். மற்றும் தேவன் அதை சாட்சி பகிர்ந்தார், "அது தான் உண்மை" தேவன் எப்பொழுதுமே உண்மைக்கு சாட்சி பகிர்வார். இந்த காரணத்தினால் தான் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை உலகில் உள்ள நாடுகளுக்கு அறிமுகப் படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு கட்டுகதையல்ல, கட்டுக்கதை அல்ல, யெகோவா தேவன் தாமே இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று கூறப்பட்டுள்ள, முற்றிலும் உண்மையான வாக்கு. மற்றும் அதை நிருபிக்கலாம். அதின் நல்ல பகுதியே அதுதான். நிச்சயமாக, இப்போது காயின் தன் சகோதரனை கண்டபோது பொறாமையின் காரணமாக கொன்றுப் போட்டான். ஆனால் ஆபேலுக்கு இது எப்படி கிடைத்தது என்று பாருங்கள். 17. இயேசு ஒரு நாள் மறுரூப மலையிலிருந்து இறங்கி பூமிக்கு வந்தபோது, அவர்: தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்தில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். 18. அது என்ன? ஒரு வெளிப்பாடு. விசுவாசம் என்றால் என்ன? ஆவியினாலே, தேவன் உனக்கு ஏதோ ஒன்றை செய்யப்போகிறதை அல்லது வாக்குத்தத்தம் செய்ததை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறாரோ. இப்பொழுது, நீங்கள் இதை மட்டும் கேட்பீர்கள் என்றால்: "விசுவாசம் கேட்பதினால் வரும்" ஆனால் கேட்டுகொண்டிருப்பது விசுவாசமாகாது. ஒரு ரொட்டி 25 சென்ட்டுக்கு வாங்கினால் அந்த 25 சென்ட் ஒரு ரொட்டி ஆகாது. பாருங்கள்? கேட்பது.......உண்டாக்குகிறது. கேட்டுக் கொண்டிருப்பது விசுவாசத்தை உண்டாக்கும் வார்த்தையை மாத்திரம் கொண்டு வருகிறது. ஆனால் "விசுவாசமானது நம்பப்படாதவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயுமாம்." அப்புறம் நீங்கள் பாருங்கள், நீங்கள் வார்த்தையை கேட்கிறீர்கள், தேவன் அது தான் உண்மை என்று வெளிப்படுத்துகிறார், மற்றும் ஆவியின் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட உண்மையானது, தேவன் மேல் உள்ள உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறது. புரிந்ததா? இப்பொழுது கவனியுங்கள். கற்பாறையின் மேல் கட்டப்பட்ட சபையை பாதாளத்தின் கதவுகள் மேற்கொள்ள முடியாது. இப்போது அந்த மிரியாம் மோசேயின்......அல்லது மோசேயின் தாய், அங்கே தன்னுடைய குழந்தையை மரணத்தில் கிடத்தப்படும் போது........எப்படி இருந்திருக்கும். ஒவ்வொரு ஆண் பிள்ளையும் பிறந்தவுடன் ஆற்றில் வீசபட வேண்டும். மற்றும் இதோ அந்த தாயே இங்கே நிற்கிறாள். அவளுக்கு மோசே சரியான குழந்தை என்று அப்போது தெரிந்திருந்தது. அவன் தேவனால் முன்குறிக்கப்பட்ட புதல்வன். இப்போது........இல்லை 18. முன் குறிக்கப்பட்டது என்பது முன்னறிவுக்கு செல்கிறது, முன்னறிவு அதன் இலக்குக்கு செல்கிறது. தேவன் அதை உண்டாக்க மாட்டார், ஆனால் தேவன் சீராக அதை செய்திருக்கிறார். ஒரு சிறிய துவாரம் மூலமாக நீங்கள் அதற்குள் செல்ல வேண்டும், வேற வழி கிடையாது. ஆனால் தேவன் தேவனாக இருப்பதினால், முடிவை துவக்கத் திலிருந்தே அறிந்திருக்கிறார். ஆகையால் அதை, சீராக, ஒழுங்காக நிர்ணயித்து, காரியங்களை ஒழுங்காக நடத்துகிறார். இப்போது கவனியுங்கள், தேவனுடைய தெய்வீக ஞானத்தினால், ஆவிக்குரிய வெளிப்பாட்டின் மூலம் இது தேர்ந்தெடுக்கப்பட்ட பாத்திரம் என்று அவர் வெளிப்படுத்தி உள்ளார். மற்றும் அவன் தாய் பார்வோனின் கட்டளைக்கு பயந்தவள் கிடையாது, விசுவாசத்தின் மூலமாக அவள் இஸ்ரவேல் ஜனங்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு கொண்டு போய் விட்டதை அவள் பார்த்தாள். ஆமென். என்ன ஒரு விசுவாசத்தை கண்கள்? என்ன ஒரு விசுவாசத்தின் வல்லமை. ஓ, அது சாத்தானின் வல்லமையை தாண்டி வெகு தூரம் செல்கிறது. சாத்தான் மரணத்திற்கு உங்களை கொண்டு செல்கிறான். ஆனால் விசுவாசம் அதை தாண்டி காண்பிக்கிறது. சாத்தான் சொல்கிறான், "நீங்கள் அங்கே போகிறீர்கள்" அது சரிதானா. ஆனால் நாம் திரும்பி வருவதற்கு தேவனுக்கு நன்றி. இயேசு மீண்டும் வரும்போது அவருக்குள் மரித்தவர்கள் அவரோடே திரும்பி வருவார்கள், ஆகையால் சாத்தானிடம் உள்ளதைக் காட்டிலும் விசுவாசமானது அதிக வல்லமை உள்ளதாக இருக்கிறது. சாத்தான் பயத்தை உண்டாக்கி, சோலக்காட்டு பொம்மைகளாய் மற்றும் அதுபோல எல்லாவற்றையும் செய்து, நிழல்களை உண்டாக்கி காலையில் நீ சாகப் போகிறாய், மேலும் இதுதான் உன்னுடைய கடைசி மணி நேரம். மற்றும் இதுவும் அதுவும் என்று சொல்வான், ஆனால் அது விசுவாசியை பயப்பட செய்யாது, அவன் ஒரு பொய்க்காரன். ஒரு வேளை இது நடக்காது என்று வெளிப்படுத்தினால், அவன் என்ன சொன்னாலும் அதை பற்றி எனக்கு அக்கறை கிடையாது, அதிலிருந்து நான் வெளியே எப்படியாயினும் வந்து விடுவேன். 20. நான், ஒரு சில நாட்கள் மட்டுமே என் ஜீவியத்தில், உயிரோடே வாழ்வேன் என்று மேயோ சகோதரர்கள் என்னிடம் சொல்லும் போது, நான் அவர்களை நம்பினேன். நான் சொன்னேன், "நல்லது, நான் மரித்து விட்டேன் என்பது போல காணப்படுகிறது." என்றேன். பின்பு பரிசுத்த ஆவியானவர், "இப்பொழுது தான், உன் ஊழியம் துவங்க ஆரம்பித்துள்ளது" என்றார். அல்லேலூயா. மேயோ சகோதரர்கள் என்ன சொன்னாலும் அது ஒரு பொருட்டல்ல, அவர்கள் சொன்னதை நான் நினைக்கவில்லை. நான் தேவன் சொன்னதை நினைத்தேன். இங்கே சமீப காலத்தில், ஒரு ஆறு அல்லது ஏழு வருடங்களுக்கு முன், ஒரு சிறு பையன் ஒரு மருத்துவமனையில் "கருப்பு தொண்டை அடைப்பான்" (Black Diphtheria) என்று சொல்லக்கூடிய நோயினால், மரித்துக் கொண்டு இருப்பதை பார்த்துக் கொண்டே நின்றிருந்தேன். அந்த வயதான தந்தை அந்த சிறுவனுக்காக அல்லது அவருடைய குழந்தைக்காக என்று சொல்லலாம், ஜெபிக்க என்னை அழைத்திருந்தார். அவன் 15 வயது நிரம்பியவனாக இருந்தான். மற்றும் அந்தப் பையன் மரித்துக் கொண்டிருந்தான். மற்றும் அந்த மருத்துவர் என்னை உள்ளே செல்வதற்கு அனுமதிக்கவில்லை; அவர், "நீங்கள் உள்ள செல்லக்கூடாது உங்களுடைய குழந்தைகள் உங்களுக்கு உண்டு." என்று சொன்னார். நான் "பரவாயில்லை, நான் அந்த ஆபத்தை எடுத்துக் கொள்கிறேன்" என்று சொன்னேன். அவர் "ஆனால் தொண்டையடைப்பானை, உங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச் செல்வீர்கள்" என்று சொன்னார். நான் சொன்னேன், "தொண்டையடைப்பான் நோயிடம் செல்வதற்கு எனக்கு போதுமான விசுவாசம் இருக்குமானால், எனது பிள்ளைகளை அது அண்டுவதற்கு, தேவன் அனுமதிக்க மாட்டார் என்பதற்கான போதுமான விசுவாசம் உண்டு" என்றேன். அவர் "நீங்கள் அதை செய்யக்கூடாது" என்று சொன்னார். அந்த மனிதர் ஒரு ரோமன் கத்தோலிக்க விசுவாசம் கொண்டவர். நான் சொன்னேன் "இப்போது நான் ஒரு குருவானவராக இங்கே நின்று கொண்டு, அந்த சிறுவனுக்கு கடைசி மந்திரத்தை செல்வதற்கு அனுமதிப்பீரோ" என்றேன். "ஓ" அது வேறு காரியம் என்று சொன்னார் ......... நான் சொன்னேன் "இல்லை, அது அதுவல்ல, அந்தக் கடைசி மந்திரம் சொல்வது எவ்வளவு புனிதமானதோ, அதுபோல இதுவும் புனிதமானது" என்றேன். 21. நான் அவரிடம் பேசினேன், "அவர் என்னை மேலே, அழைத்து வேறொரு உடையை அணிவித்து, எல்லாம் வெள்ளை நிறமான உடுப்பை போட்டு, முகத்திற்கு ஒரு பெரிய துண்டை மூடினார், மற்றும் எனக்கு எங்கே போகிறேன் என்று பார்க்க கூட முடியவில்லை. ஒரு பெரிய கவுன் எனக்கு பின்னால் இழுத்துக் கொண்டே வந்தது. உங்களுக்கு என்னை கண்டு பிடிக்கவே முடியாது. நான் கீழ நடந்து சென்றேன், அது நன்றாக இருந்தது. அதற்குள் செல்ல ஒரே வழி தான் இருந்தது. அது சட்டங்களை பின்பற்றுவதற்கான ஒன்று எப்பொழுதுமே விளையாட்டின் சதுரத்தை விளையாடுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஆகையால் நான் அதினுடாக அங்கே சென்றேன். அந்தத் தாயும் தந்தையும் கூட வந்தார்கள். இரண்டு நாட்களுக்கு அவன் சுயநினைவு இல்லாமல் இருந்தான். நான் அவனை சுற்றி வந்தேன். நான் அவனிடம் பேச முயற்சித்தேன். அவன் பேசவில்லை. நான் முழங்கால் படியிட்டு, அவன் தந்தையை பார்த்தேன். மற்றும் அவர் என்னைப் பார்த்தார். அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. நான் எனது கரங்களை அந்த சிறுவன் மீது வைத்தேன். நான் சொன்னேன் "நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாய் இருக்கிறேன் என்று நீங்கள் சொன்னீர்கள். நீங்கள் தான் இந்த காரியங்களை வாக்குத்தத்தம் பண்ணிருக்கிறீர்கள், மற்றும் இந்த சிறுவனின் தகப்பன் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டும் என்று, நீங்கள் அனுப்பியதாக நம்பி, என்னை இந்த குழந்தைக்காக ஜெபிக்கும் படி அழைத்தார். மற்றும் தகப்பனே இந்த சிறுவனுக்காக என்னுடைய முழு இருதயத்தோடு விசுவாச ஜெபத்தோடு உங்கள் வஸ்திரத்தை தொடும்படியாக ஜெபிக்கிறேன். மற்றும் என் இருதயம் அறிந்த மட்டில், தோல்வி இல்லாத விசுவாசத்தோடு இந்த சிறுவன் உயிர் பிழைப்பான் என்று நம்புகிறேன். நான் சொன்னேன், இதை "இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன்" என்று அவன் எழுந்தான். 22. அந்த வயதான தகப்பனார் அந்த தாயை பார்த்து சொன்னார் "ஓ, அம்மா இது அற்புதமாக இல்லையா? இந்த மகன் உயிரோடு இருப்பது போலவே இல்லாமல் இருந்தான். மற்றும் அவர் சொன்னார் "ஓ, நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன்." மற்றும் அந்த சிரிய பணிப்பெண் அங்கே நின்று அழுது கொண்டிருந்தாள், மற்றும் அவள் திரும்பி சொன்னாள், "எனக்கு இது புரியவே இல்லை." "உங்களுக்கு தெரியுமா, உங்கள் மகன் மரித்துக்கொண்டிருக்கிறான்?" என்று சொன்னாள். அவர் சொன்னார் "இல்லை அம்மையாரே, நான் அப்படி நினைக்க வில்லை." அவள் சொன்னாள் "நல்லது, இப்பொழுது நீங்கள் பாருங்கள்....." அவர் சொன்னார்; அவர் சொன்னார் "என்னுடைய மகன் மரித்துக் கொண்டிருக்கவில்லை, என்னுடைய மகன் வாழபோகிறான்." "தேவன் அதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார்." மற்றும் அவர் சொன்னார்..." "ஏன், பாருங்கள், விசுவாசம் வைப்பது நல்லது தான்" அவள் சொன்னாள், "ஐயா" ஆனால் "நான் சொல்கிறேன்" அவள் சொன்னாள், ஒரு விதமான மின்முறை இதயத் துடிப்பை பதிவு செய்யும் கருவி (cardiogram) அல்லது ஏதா ஒரு விதமான பொறியை அவன் இருதயத்தின் மேல் வைத்தார்கள். மற்றும் சொன்னார்கள் "இந்த அதிர்வுகள் கீழே இப்படி போனால், மீண்டும் மேலே வருவது மருத்துவ வரலாற்றிலேயே கிடையாது. "உங்கள் மகன் மூன்று அல்லது நான்கு மணி நேரத்துக்கு மேலே உயிர் வாழ முடியாது" என்று சொன்னாள். 23. மற்றும், அந்த வயதான மனிதனை, என்னால் மறக்கவே முடியாது. அவர் அந்த இளம் பெண்ணின் தோள் மீது தம்முடைய கரங்களைப் போட்டு, அவள் ஒரு முதிர்ந்த வாலிப பெண்ணாக இருக்கலாம்; அவர் சொன்னார் "அன்பான சகோதரியே, நீங்கள் அந்த பொரியை பார்க்கிறீர்கள், அவ்வளவுதான் உங்களால் அதைப் பார்க்க முடியும். ஆனால் நான் ஒரு தெய்வீக வாக்குத்தத்தை பார்க்கிறேன்" ஆமென். மறுநாள் காலையில் அந்த சிறுவன் காலை உணவு எடுத்தான். மற்றும் அவனுக்கு திருமணம் ஆகி விட்டது, ஒரு குழந்தையும் உண்டு, பாருங்கள். அந்த பெண்ணுக்கு அந்த பொறி என்ன சொல்கிறதோ அதை மட்டும் தான் செய்ய அவளுக்கு தெரியும். ஆனால் அந்த வயதான மனிதனுடைய பார்வை; அவன் விசுவாசம் அதற்கு மேலே ஊடுருவி சென்றது. மற்றும் அவன் எல்லை கடந்து, அபரிதமாக செயல்படக்கூடிய தேவனை பார்த்தான். வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் நம்மை விட்டு விலகவில்லை, கைவிடவும் இல்லை. அவர்....நீ எதை பார்க்கிறாய் என்பது மேலே அவர் சார்ந்து இருக்கிறார். ஓரு கிறிஸ்தவன் காண கூடாததை நோக்கி பார்க்கிறான் ஏனென்றால் அவன் விசுவாசித்து நடக்கிறான். அது சரிதானா? வேதாகமம் அதை சொல்லி இருப்பதினால், நாம் அதை விசுவாசிக்கிறோம். அவர்கள் அதை விசுவாசிக்கிறார்கள். இப்படிதான், தேவன் அதை சொன்னார் என்பதற்காக நாம் விசுவாசிக்கிறோம். விசுவாசம் பரீட்சிக்கப்பட்டு முயற்சிக்கப்படுவதால் அது 100% நிரூபிக்கப்படுகிறது. தேவன் அதற்கு பதில் அளிக்க கடமைபட்டுள்ளார். 24. அங்கே நின்று கொண்டிருக்கும் அந்த தாய் என்ன செய்தார்கள் என்பதை பாருங்கள். மற்ற குழந்தைகளுக்கு நேர்ந்த அதே மரணத்தை தன்னுடைய குழந்தைக்கும் ஏற்படவேண்டும் என்று அவள் அந்த குழந்தையை கிடத்தினாள். மற்றும் இதுபோல ஒரு சிறிய கூடையில் அந்த குழந்தை படுத்து கொண்டிருக்க செய்தாள், அது மூன்று மாதம் நிரம்பிய குழந்தையாய் இருந்தது. அது அந்த கூடையில் இவ்வளவு பெரிதாக இருக்கும், அதில் ஒரு கொத்து நாணல் புற்களும், பிச்சு கலந்த, ஒட்டும் பொருளால், இணைத்து அந்த கொடிகளுக்குள், முதலைகளும், மற்றவைகளும் இருக்கும் அந்த தண்ணீரில் அனுப்பப்பட்டது. அதனால்......ஏன் அது மரணத்தை பொருட்படுத்தும். நல்லது, நிச்சியமாக. அது அதே மரண ஆற்றிலேயே இருந்தது. ஆனால் விசுவாசத்தினால், அதற்கு ஒரு உடன்படிக்கை செய்யப்பட்டது. இயற்கை விதிகளால் உண்டாக்கபடாமல் அது விசுவாசத்தினால் உண்டானது, இயற்கையான விதி, குழந்தை இருப்பதை முதலைகள் மோப்பம் பிடித்து இருக்கும். இயற்கையின் நீதி படி முதலைகள் அந்த குழந்தையை மோப்பம் பிடிப்பதை நிரூபிக்கப்பட்டிருக்கும், மற்றும் அவ்வளவு தான். பாருங்கள்? அல்லது அந்த முதலாம் வந்த சிறு அலை அதை கவிழ்த்து போட்டிருக்கும், அது முடிந்து போயிருக்கும். ஆனால் விசுவாசம் அதை தாண்டி நோக்கியது. அவளுக்கு அந்த குழந்தையின் மீது தேவனுடைய கரம் இருந்தது என்று தெரியும். ஆகையால் அந்த ராஜா என்ன சொன்னார் என்பதை குறித்து அவள் கவலைப்படவில்லை. மற்றும் விசுவாசம் என்ன செய்தது என்று பாருங்கள். விசுவாசமானது மரண ஆற்றிலிருந்து அவனை வெளியே எடுத்து, உயிர்த்தெழுதலில் அவனை பார்வோன் அரண்மனைக்கு எடுத்துச் சென்று, அங்கே அவனை வளர்த்து, மற்றும் கல்வியை, சரியாக, பிசாசின் ஆயுதமாகிய பர்வோனின் அரண்மனையில் படிப்பித்தது. தேவன், சத்தானின் கண்களில் உள்ள அந்த கயிறை பிடித்து இழுத்தது ஒரு முறை மாத்திரம் அல்ல......சாத்தானின் ஆயதமாகிய பார்வோன் தான், குழந்தைகளை கொன்று கொண்டு இருந்தான். எந்த குழந்தையை (குழந்தைகள், children என்று அச்சிடப்பட்டுள்ளது-ஆசி) கொல்ல வேண்டும் என்று இருந்தானோ, அந்த குழந்தையை தேவன் தம்முடைய ஆயுதத்தை மீண்டும் அனுப்பி வளர்க்க வைத்தார். அல்லேலூயா. 25. தேவனனுடைய மிஞ்சி செயல்படாதீர்கள். தேவன் தம்முடைய அதிசயங்களை நடப்பிப்பதற்கு, விசித்திரமான வழிகளின் மூலம் அதை அவர் செய்வார். பிசாசுபிடித்த கடின இருதயம் கொண்ட, அந்தப் பார்வோன் ஒவ்வொரு யூத குழந்தையையும் கொன்றான். ஏனென்றால் சாத்தான் அவனை அபிஷேகித்திருந்தான். ஆனால் அந்த குழந்தையை அவர்களுக்கு ராஜாவாகும்படி செய்து, அவனுக்கு கல்வி அறிவை புகட்டி, அவனை வளர்த்து, படிப்பை அளித்து உணவை தந்து, மேலும் அவனுடைய தாயே அவனை வளர்கும்படி பணிப்பெண்ணாக அமர்த்தினான். ஆமென். அது தான் விசுவசமானது செய்யும். அந்த தாய் அதை பார்த்தாள். விசுவாசத்தின் மூலமாக அவள் அதை பார்த்தாள். அந்த காரணத்தினால்தான், அவள் கீழே சென்று தன்னை பணி பெண்ணாக இருக்கும்படி அழைப்பார்கள் என்று அறிந்து, தன்னுடைய மகள் திரும்பி வருவதற்காக காத்துக் கொண்டிருந்தாள். பாருங்கள், அதை அவர் ஏற்கனவே அவள் அதை உள்ளத்தில் வைத்திருந்தாள், காரணம் தேவன் அதை அவளுக்கு வெளிப்படுத்தி யிருந்தார். ஆமென். ஒருவேளை, அந்த தாய்க்கு வெளிப்படுத்தினது போல, தேவன் இந்த இரவு அபிஷேகத்தின் நிமித்தம் உன் நோய்கள் நீக்கப்பட்டது என்று உனக்குக் கூறுவாரானால், அது முடிந்தது. ஆமென். விசுவாசத்தின் வல்லமையானது, அவளுடைய குழந்தை மீண்டும் எழும்புவான் என்பதை அறிந்து, அவனை மரணத்தின் பிடியில் சரியாக அமர்த்தியது ஆமென். சரியாக மரணத்தின் தாடையில் அறைந்தது போல அமர்த்தியது. 26. சிலவேளைகளில் சோதனைகள் நமக்கு வரலாம். ஜனங்கள் சொல்வார்கள் "ஓ, எனக்கு இது நடந்திருக்கவே வேண்டாம், தேவனே என்று நாம் நினைக்கலாம். நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்தும் ஏன் எனக்கு இப்படி நடந்தது, சகோதரன் பிரன்ஹாம்? என்று கேட்கலாம். "தேவன் அதை உன்மேல் வரப்பண்ணினார். அதனால் - அவருடைய அன்பை உங்களுக்கு காண்பித்தார். இதன் மூலம் "நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாய் இருக்கிறேன் என்பதை நிருபித்து காட்டுவதற்காக உங்களுக்கு அப்படி நடந்தது." மரணம் சொல்கிறது, "எனக்கு உரிமை உண்டு" அந்த ராஜாவின் கட்டளை என்னவென்றால், எல்லா குழந்தைகளையும், சமுத்திரத்தில் மூழ்கடிக்கப் வேண்டும் என்பதாகும். அவள் சொன்னாள், "வெளிப்பாட்டின் நிமித்தம், இந்த சமுத்திரத்திலோ அல்லது இந்த தண்ணீருக்கு அடியில் நான் குழந்தையை போடுகிறேன். தப்பித்துக் கொள்வதற்கு ஒரு வழியையும் நான் தயார் செய்து விட்டேன்" ஆமென். மற்றும் அவள் அந்த குழந்தையை மரணத்தில் கிடத்தினாள். மற்றும் விசுவாசமானது, அவனை வெளியே கொண்டு வந்து, பார்வோனின் மகளுக்கே அவனை, மகனாக அளித்து, மற்றும் அவனுடைய தாயையே பணிப்பெண்ணாக இருக்கும்படி செய்தது. தேவன் அதை எப்படி செய்தார் என்பதை பாருங்கள்? தேவன் முற்றிலுமாக தமது மகிமைக்காக அதை செய்தார். மற்றும் அதை எடுத்து, நேரே சாத்தானின் மூக்குக்கடியில் வைத்து சொன்னார், "சாத்தானே நீ எவ்வளவு குருடாய் இருக்கிறாய் என்பதை காட்டுவதற்காகவே இப்படி செய்தேன்." குழந்தையை நேரே அவன் முகத்திற்கு அடியில் வைத்து, சாத்தானே அதற்கு பால் ஊட்டி, அதை பாதுகாத்து, ஊட்டம் கொடுத்து, அதே மனிதனால் அந்த முழு தேசமும் நாசமாக்கபட்டு, ஜனங்களை வெற்றி சிறக்கும்படி செய்தார். 27. மற்றும் இப்பொழுது கவனியுங்கள். இப்போது பகல் நேரத்தில் அவன்......உலகத்திலேயே எகிப்து தேசம் தான் ராணுவத்தில் உயர்ந்த நிலையில் இருந்தது, உலகத்திலேயே மிக உயர்ந்த வர்த்தக மையம், அங்கு தான் இருந்தது என்று நான் யூகிக்கிறேன். அதினால் மோசேவுக்கு ஆயுத படை அதிகாரிகள் பயிற்சி (ROTC) மற்றும் எல்லாம் அவனுக்கு கிடைத்தது, என்பதில் ஐயமில்லை. தேவன் அவனுக்கு அப்படிப்பட்டதான் பயிற்சியை அளித்திருந்தார், ஏனென்றால் அவன் ஒரு பெரிய பட்டாளத்தை நடத்திச் செல்ல வேண்டி இருந்தது. மற்றும் சாத்தான் தன்னில் தானே அழித்து கொள்வதற்கு, தேவன், மோசேயை கொண்டு ஒரு பட்டாளத்தையே வழிநடத்துவதற்கான பயிற்சியை, சாத்தானே அவனுக்கு அளிக்க வைத்தார். அல்லேலூயா. அதுதான் விசுவாசத்தின் வல்லமையாகும். விசுவாச கண்களால், அவள் அதை பார்த்தாள். அது மட்டும் அல்ல, அவள் அதற்காக ஆயத்தங்களை செய்திருந்தாள். அவள் அந்த குழந்தையை அபிஷேகத்துக்குள் வைத்திருந்தாள், மேலும் வெளியே நடந்து வந்து, அந்த ஆற்றங்கரையில் தன்னை கூப்பிடுவதற்கு ஆள் வரும் என்று காத்துக் கொண்டிருந்தாள். மகிமை. இதோ அங்கே தான் நீங்கள் அந்த நேரத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள். விசுவாசத்தினால் அவள் அதற்காக சகித்துக்கொண்டிருந்தாள். காண முடியாத அவரை அவள் பார்த்தாள். அவளுக்கு நன்றாக இதுதான் சரியான குழந்தை என்று தெரியும். அவளுக்கு தேவன் என்ன வாக்குத்தத்தம் பண்ணினார் என்று நன்றாக தெரியும். அதே சமயத்திலே அந்த இஸ்ரவேல் ஜனங்களின் விடுதலையும் துவங்க ஆரம்பித்துவிட்டது. மற்றும் அவளுக்கு இதுதான் அந்த குழந்தை என்று நன்றாக தெரியும். ஆமென். 28. மற்றும் இப்போது, பகல் வேலையில், அந்த தலைமை அதிகாரிகள் இருப்பதிலேயே சிறந்த பயிற்சியை அளித்தனர்......அவனுடைய இரவு உணவை ஒரு தட்டில், சாத்தானே கொண்டு வந்து அவனுக்கு ஊட்டினான். ஓ என்ன ஒரு சாப்பாடு, இன்று இருப்பது போல, பொறித்த கோழி, மாமிசம், உருளை கிழங்கு, மற்றும் தேநீர், மற்றும் எல்லாம். தேவன் அங்கு உட்கார்ந்துகொண்டு சொன்னார், "சாத்தானே, நான் என்ன செய்ய கூடும் என்று பார்" நீ என்ன பெரிய ஆள் கிடையாது? பார்? நீ கேட்டுக்கொண்டது போல, நாம் அவனை சாகக்கொடுத்தோம். ஆனால், என்னை நம்புகிற எல்லா மனிதர்களுக்கு, இயேசு கிறிஸ்து மூலமாக, நான் என்ன செய்ய போகிறேன் என்பதை அந்த தாய் பார்த்தாள். அதை விசுவாசத்தினால் அதை செய்தாள்." மற்றும் மோசே, ஒரு நல்ல பயிற்றுவிக்கப்பட்ட உண்மையான அதிகாரியாக இருப்பதற்கு காரணம் அவன்......பார்வோன் அரண்மனையில் பயிற்றுவிக்கப்பட்டான், பார்வோன், அவன் சிங்காசனத்திற்கு வந்த பிறகு, அவன் ஒரு பெரிய பட்டாளத்தை நடத்தி செல்வான் என்று நினைத்தான். மற்றும் பார்வோன், "என்றோ ஒரு நாளில் அவன் பார்வோனாக இருப்பான்" என்று சொன்னான். அதற்குப் பிறகு, அவன் சிறப்பாக பயிற்சிப்பெற்றான், இதை எல்லாம் தேவன் செய்தார். காரணம், மோசே தன் படையை வரிசைபடுத்தி, நிற்கவைத்து, அந்த எமோரியர்களுடன் போருக்கு செல்லும் போது......அந்த நன்கு பயிற்சிபெற்ற மோசேயிடம் ஒருமுறை கூட அவர்களால் வெல்ல முடியவில்லை. ஏன் நிச்சயமாக முடியாது. கிராண்ட், (Grant) ரிச்மண்ட் (Richmond) என்பவர் செய்தது போல அவன் செய்தான். அவன்...நான் சொல்கிறேன், அவர்களுக்கு அவனோடு ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் நேரே பயப்படாமல் சென்றான் காரணம், அவன் எகிப்தின் எல்லா ஞானத்திலும் பயிற்சி பெற்றிருந்தான். மற்றும் அவனுடைய பள்ளியில், படிப்பை முடித்தவுடன், இரவு பாட படிப்பும் முடிந்தவுடன், அவனுடைய தாயார், தூங்கும் அறைக்கு அழைத்து சென்று, பயிற்சி கொடுத்தாள் (அல்லேலூயா) நீதியை கற்பிக்கும் ஒரு ஆசிரியர். ஆகையால் நீங்கள் பாருங்கள், ஒவ்வொரு தாயாரும் ஒரு ஆசிரியர் தான். அவளுக்கு ஒரு சிறிய.......அவளுக்கு - அவளுக்கென்று ஒரு சிறிய சொந்த சபை தன்னுடைய வீட்டில் உண்டு. 29. ஆகையால் அவள், மோசேயிடம் இவ்வாறாக சொல்லி அவனுக்கு பயிற்சி கொடுத்தாள். இப்போது அவன் சொன்னான் "அம்மா எனக்கு புரிகிறது, ஆனால் இப்போது, யெகோவா என்ன செய்யப் போகிறார் என்பதை பற்றி, நீங்கள் என்னிடம் என்ன சொன்னீர்கள்?" மற்றும் விசுவாசத்தின் மூலமாக அவனுக்கு அவள் வாசித்து காட்டினாள். மற்றும் அவன் சிம்மாசனம் அடைவதற்கு, நேரம் வந்தபோது அவன் பார்வோனின் மகள் என்று அழைப்பதற்கு மறுத்தான். விசுவாசத்தின் மூலமாக (அல்லேலூயா) அவன் தாயாருக்கு, நடந்ததை அவன் பார்த்து, அதையே அவன் எடுத்துக் கொண்டான். அது பவுலுக்கு என்ன செய்தது என்று நான் பார்க்கிறேன்; அது பேதுருவுக்கு என்ன செய்தது என்று நான் பார்க்கிறேன். அது மற்றவர்களுக்கு என்ன செய்தது என்று நான் பார்க்கிறேன். விசுவாசித்தின் முலமாக அதே எனக்கு நேரிட வேண்டும் என்று விரும்புகிறேன். மேகம் எவ்வளவு கருமையாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அதற்கு அப்பால் சூரியன் பிரகாசித்துக் கொண்டு இருக்கிறது. சூரியன் பிரகாசித்துக்கொண்டு இருக்கும் வரையில் நாம் அங்கே செல்வோம். அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட முகத்தை புயல் மறைக்க முடியாது. ஆமென். அவர் நமக்கு மென்மையாக படகோட்டி செல்லும்படியாக வாக்கு தத்தம் பண்ணவில்லை; ஆனால் அவர் எப்பொழுதுமே என்ன வாழ்த்துக்கள் பண்ணினார் என்றால்" நான் உன்னுடைய கூட இருக்கிறேன்." ஆமென். ஆகையால் அவர் நம்மை சுற்றி இருக்கும் போது எவ்வளவு பெரிய புயல் வந்தாலும் அது என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணும். காற்றும் கடலும் அவருக்கு கீழ்படிகிறது. ஆமென். 30. ஓ, இப்பொழுது அந்த அற்புதமான விசுவாசத்தை குறித்து பேசுவதற்கு அநேக மணி நேரம் செல்லும்: பஸ்காவை அவர் விசுவாசத்தின் மூலமாக எப்படி அனுசரித்தார், எப்படி அவர் தேவனை சந்தித்து அவரோடு கூட பேசினார். விசுவாசத்தின் மூலமாக அவன் கீழே சென்று பஸ்கா ஆட்டுக்குட்டியை வைத்து, வெளியே வந்து, அவன் பாதையில் சென்றான். தேவன் இவை எல்லாவற்றையும் விசுவாசத்தின் வல்லமையால் செய்கிறார்......விசுவாசம் என்ன செய்யும் என்று பாருங்கள். 31. இப்போது, வாக்குத்தத்தம் பண்ணபட்ட தேசத்திற்கு அவனை நேரே வழிநடத்தினார். அங்கே தேவனுக்கும், பார்வோனுக்கும் இடையே நடந்த எல்லா போட்டிகள் பற்றியும் உங்களுக்கு தெரியுமா? எப்படி விசுவாசத்தின் மூலமாக இதை செய்தான். விசுவாசத்தின் மூலமாக இதை செய்தான். விசுவாசத்தின் மூலமாக இதை செய்தான். மற்றும் இப்போது, இன்றிரவு நம்முடைய பாடத்தில் அவர்கள், அவர்களுடைய பிரயாணத்தில் இருப்பதை கண்டறிகிறோம். மற்றும், அங்கு அப்பால் அவர்கள் பார்க்கும் போது, இதோ அங்கே செங்கடல் ஒரு புறமும், இரண்டு பக்கமும் மலைகள் சூழ்ந்திருக்க, மற்றும் அவர்கள் திரும்பி கண்களை ஏறெடுத்து பார்க்கும் போது, அங்கே பார்வோன் தன்னுடைய முழு இராணுவத்தையும், பயிற்சி பெற்ற வீரர்களையும், அவனுடைய இரத்தத்தின் குதிரைகளையும், மற்றும் ஒவ்வொரு ரத தலைவர்களையும் மற்றும் எல்லாவற்றையும் பார்த்தார்கள். இதோ இங்கே பத்தாயிரம், சொல்லபோனால் பத்து லட்சம் ஆயுதம் ஏந்திய வீரர்களின் வருகையால் உண்டான ஒரு பெரிய மேக மூட்டம் போல தூசி ஏழும்பிற்று. மற்றும் இங்கே இந்த சிறு செம்மறி ஆட்டு கூட்டம், ஒநாய்களால் துரத்தப்பட்டு வருவதை பார்க்கிறோம். பின்பு என்ன நடந்தது? மனிதர்களை போலவே, நாம் எல்லோரும் செய்வது போலவே, அங்கு நடந்தது. "எகிப்தில் எங்களை புதைப்பதற்கு போதுமான கல்லறைகள் இல்லையோ?" அது போல தான் நாம் நினைக்கிறோம். ஒரு சில நாட்களுக்கு முன்னால் விசுவாசத்தினால் நடந்தவைகள். அனைத்தையும் மறந்துவிட்டனர். அது தான் நாம் செய்கிறோம். நீங்கள் ஜெபித்தவுடன், முதல் ஒரு சிறிய வலி நம்மை அடிக்க ஆரம்பிக்கும். "ஒ நல்லது, நான் இழந்து விட்டோமென்று யுகிக்கிறேன்." ஓ என்னே, மற்றும் இந்த நடை மேடைக்கு வந்து, தாங்கள் புற்று நோயிலிருந்து சுகம் பெற்றதாகவும், குருடாயிருந்த கண்கள் திறக்கப்பட்டன என்றும், முடவராக இருந்தவர்கள் மீண்டும் நடக்கின்றனர் என்று சொல்வதை கேட்கின்றேன். மற்றும் இந்த எல்லா காரியங்களையும் பார்க்கிறோம். அதை உற்று பார்க்கிறோம், ஆராய்ச்சி செய்கிறோம், தொடர்ந்து அதில் சென்றுக்கொண்டே இருக்கிறோம். அதற்குப் பிறகு முதலில் ஒரு சின்ன சண்டை அதோட வருகிறது. நாம் அதை பற்றின எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம். உயிர்த்தெழுந்த வல்லமையில் இருக்கிற இயேசு கிறிஸ்துவை பாருங்கள், ஆனால் நாம் வெகு சீக்கிரத்தில் அதை மறந்து விடுகிறோம். அது தான் மனுஷீக பகுதியாக உள்ளது. 32. ஆனால் அவர்கள் அதை பார்த்திருந்தும், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்பொழுது, அது என்ன ஒரு இடமாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள், தேவனுக்கு முன்பாக மிகவும் பயபக்தியாக நடந்த ஜனங்கள், அவருடைய கற்பனைகளை சரியாக வைத்திருந்தவர்கள், அந்த பஸ்கா ஆட்டுக்குட்டியை புசித்திருந்தனர்; இரத்தத்தை தெளித்திருந்தனர்; மோசே கொடுத்திருந்த ஒவ்வொரு வழிமுறைகளையும் பயபக்தியோடு பின்பற்றினர். அதற்கு பிற்பாடு தேவன் அவர்களை சரியாக அந்த இடத்திற்கு அழைத்து சென்று, கண்ணிவைத்தார். ஓ என்ன ஒரு காரியம். அவர்கள் உதவியற்றவர் களானார்கள், அவர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதோ ஒரு பக்கம் அந்த சிவந்த சமுத்திரம், மற்றும் இரண்டு பக்கமும் மலைகள் சூழ்ந்து இருக்க, மற்றும் அவர்கள் ஒரு சிறு குறுகிய வழியில் நின்றுகொண்டிருக்கின்றனர், மற்றும் பார்வோன் சேனை வந்து கொண்டிருக்கிறது, தேவன் அவர்களை ஒரு கண்ணியில் அகப்படும் படி செய்தார். ஓ, ஆனால் என்ன ஒரு அதிசயம், உலக தோற்றத்திற்கு முன்னமே, தேவன் அவர்களின் பிரயாணத்தின் ப்ளூ பிரின்ட்டை (blue print) வரைந்திருந்தார். அல்லேலுயா, நான் இப்படி அல்லேலூயா என்று சத்தமிடுவதால் நான் பைத்தியக்காரன் என்று நினைக்கவேண்டாம். என்னால் அதை செய்யாமல் இருக்க முடியாது. நான வெடித்து விடுவேன். இதை நான் நம்புகிறேன். "அல்லேலூயா" என்றால் "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" அல்லேலூயா, தேவனை துதியுங்கள் எல்லாம் சரி. அந்த ஒரு வார்த்தை மட்டும் என்னால் ஜெர்மன் பாஷையிலும், அல்லது மற்ற எந்த மொழியிலும் பேச முடியும். தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஆட்டன் டாட்ஸ் என்று சொல்லக்கூடிய மக்களுக்கும் என்னால் பேச முடியும். அது அதே விதமான வார்த்தை தான், அது எந்த இடமாக இருந்தாலும் சரி. அது ஒரு காரியமும் அல்ல; அல்லேலூயா ஒரே விதமான வார்த்தையாக தான் இருக்கிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 33. மற்றும் இதோ அவர்கள் நெருக்கப்பட்டு இருந்தனர். தேவன் தன்னுடைய பிள்ளைகளை எகிப்தின் அந்தப் பகுதியில் இருந்து அவர்களை இழுத்து, அவர்களை நடத்திக் கொண்டு வந்து மற்றும் சரியா இந்த இடத்தில் அவர்களுக்கு கண்ணி வைத்தார். பரலோகத்தில் தேவன் அவர்களை ஒரு அக்கினி ஸ்தம்பத்தின் மூலமாக அவர்களை வழிநடத்தி சென்றார், மற்றும் அவர்களை இந்த கண்ணிக்குள் கொண்டு வந்தார். இப்பொழுது அவிசுவாசமானது இப்படி சொல்லும். ஏன்? ஏன் அவர் அப்படி செய்தார்? "பாருங்கள், அவர்கள் அதிலிருந்து வெளியே வந்தவுடன், அவர்கள் பாவமாகிய வனாந்தரத்துக்குள் நேரே சென்றார்கள். சரியாக அதில் இருந்து முறுமுறுப்புக்கள், மற்றும் எல்லாவற்றிற்குள்ளும் சென்றார்கள். தேவன் தன்னுடைய பிள்ளைகளை அப்படிப்பட்டதான வலையில் தான் நடத்தி செல்கிறார். சிலரை தண்ணீரின் மூலமாகவும், சிலரை வெள்ளத்தின் மூலமாகவும், சிலரை ஆழ்ந்த சிட்சிப்பிலும், ஆனால் எல்லாமே இரத்தத்தின் மூலமாக ... ஆமென். அதுதான் வழி; அதை சும்மா பின்பற்றுங்கள். அவர் எங்கே நடத்தி செல்கிறாரோ, அதை பற்றியதான எந்த வித்தியாசமும் இல்லை. சற்று அவரை பின்பற்றி சொல்லுங்கள். மற்றும் அதை தான் இஸ்ரவேலர்கள் செய்து நேரே கண்ணிக்குள் மாட்டிகொண்டனர். ஆனால் மனுஷீகமாக, அவர்கள் எல்லா அற்புதங்களையும் மறந்து விட்டனர். உன்னதமான தேவன் நடத்தி சென்ற எல்லாவற்றையும் மறந்து விட்டனர். மற்றும் "நாம் என்ன செய்யலாம்?" என்று அங்கலாய்த்தனர். அதன் பின் மோசே தேவனை நோக்கி கூப்பிட்டான், மற்றும் ஒரு சத்தம் கேட்டது "நீ அப்படியே நின்றுகொண்டு (அல்லேலூயா) தேவனுடைய இரட்சிப்பை பாருங்கள். "எதை பார்க்க வேண்டும்? இரட்சிப்பை. இப்போது தேவன்...... 34. இந்த காட்சி சாத்தானால் நிரூபிக்கப்பட்டிருந்தது. ஆற்றிலே மரணம். மற்றும் எகிப்த்தை விட்டு வந்ததிலிருந்து, அவர்கள் செய்த அநேக காரியங்களிலும், விசுவாசத்தின் வல்லமையானது நிர்மூலமாக்கப்பட்டதிலிருந்து நிரூபிக்கப்பட்டது. விசுவாசம் வல்லமை உடையது என்பதை நிரூபித்து விட்டது. இப்போது தேவனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர்கள் இப்பொழுது கண்ணியில் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்போது தேவன் ஏதாவது ஒன்று செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. ஜனங்களால் ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விட்டது. அவர்கள் எல்லா சட்ட திட்டங்களை பின்பற்றியும், கண்ணியில் அகப்பட்டுக் கொண்டனர். இப்போது தேவன் செயல்படுவதற்கான நேரம் வந்து விட்டது. "ஏன் அவர் அப்படி செய்தார்?" தமது அன்பை அவர்களுக்கு காண்பிப்பதற்காக அவர் அப்படி செய்தார். அதனால் தான் ஒரு வேளை உங்களுக்கு வியாதி உண்டாயிருக்கிறது. அவர் தமது அன்பை உங்களுக்கு காட்ட விரும்புகிறார். நீங்கள் ஒரு முறை, உங்கள் சாலையின் முடிவுக்கு வர அவர் விரும்புகிறார். உங்களுக்கு ஒன்று தெரியுமா? சில வேளைகளில் அது மிகவும் மோசமாக உள்ளது, ஆனால் தேவன் நமக்கு அப்படி செய்ய வேண்டியதாக உள்ளது, ஏனென்றால் நாம் அவரை அடிக்கடி நோக்கி பார்ப்பதற்கென்று. அது சரிதானே. ஆமாம் அவர் தமது அன்பை நமக்கு காட்ட விரும்புகிறார். அவர் தமது வல்லமையை காட்ட விரும்புகிறார். தேவன் தம்முடைய வல்லமையே வெளிப்படுத்த விரும்புகிறார். 440 வருடங்களுக்கு முன்பாக அவர் ஆபிரஹாமிடம் (இருபது வருடங்கள் அதற்கு முன்பாக, அல்லது அது நான்கு _ நாற்பதாக இருந்தது.) இஸ்ரவேல் புத்திரரை பலத்த கைகளினால் அந்த நேரத்திற்கு முன்பதாக, வெளியே கொண்டு வருவதாக அவர் சொன்னார். தேவன் தமது வாக்கை நிறைவேற்ற வேண்டும். பலத்த கைகளினால் அவர்களை வெளியே கொண்டு வருவேன் என்று சொல்லி, வார்த்தையினால் அதை நிறைவேற்றின அதே தேவன் சொன்னார் "அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்தால், அவர்கள் சுகம் பெறுவார்கள்." அவர் அதை அந்த வார்த்தையில் நிறைவேற்றுவார். வெளிப்பாடு இல்லாமல், எத்தனை குறை சொல்லுபவர்களாலும், மற்றும் தங்கள் இறையியலால் எழும்பி வார்த்தையில் என்ன மனக்கருத்து கொண்டிருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல. எப்படியாகிலும் தேவன் தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவார். ஆமென். நான் உங்களை திட்டவில்லை. இந்த காரியம் ஒரு மோசமான சத்தமுடையதாய் இருக்கிறது, மேலும் இப்பொழுது நான் மிகவும் நன்றாக உணருகிறேன். ஆகையால் நான் அதிலிருந்து வெளியே வருகிறேன். 35. கவனியுங்கள், தேவன் செயல்படுவதை பாருங்கள், அது ஆச்சரியமாக உள்ளது அல்லவா? டெக்சாஸில் உள்ள ஆர்லிங்டன் என்னும் இடத்தில், சில நாட்களுக்கு முன்பு நான் ஒரு சிறிய விடுதியில் இருந்தேன். ஒரு நாள், ஒரு இரவு நான் தங்கியிருந்த விடுதியில், ஒரு பெண் அழும் சத்தத்தை கேட்டேன். மற்றும் நான் நினைத்தேன் "யாரோ ஒருவர் பிரச்சனையில் உள்ளனர்"என்று நான் திரும்பி பார்த்த போது, அந்த சத்தம் ஒரு சிறிய இடத்தில் இருந்து வந்து கொண்டிருந்தது. அங்கே இரண்டு வாலிப பிள்ளைகள் இருந்தனர். அவர்களை பார்த்தால் 20 வயது துவக்கத்தில் இருப்பவர்கள் போல இருந்தது. 21, 22 வயதுக்குள் இருக்கும். ஒரு கருப்பு முடியை கொண்ட பெண்ணும், சொட்டை விழுந்த ஒரு பெண்ணும் நின்று கொண்டிருந்தனர், அவர்கள் இரண்டு பேரும் ஒருவர் மீது ஒருவர் தம் கரங்களை போட்டுக் கொண்டு, அழுது கொண்டு இருந்தனர். மற்றும் அவள் சொன்னாள், "ஆமாம், சகோதரன் பிரன்ஹாமே." அவள் என்னைப் பற்றி அறிந்தவள் என்பதை நான் அறிந்தேன். மற்றும் நான், "உங்களுக்கு என்ன பிரச்சனை?" என்று கேட்டேன், அவள் சொன்னாள், "எங்களுக்கு ஒரு ஜெப அட்டை கிடைக்காமல், வரிசையில் வர முடியவில்லை என்பதை நாங்கள் கண்டு, நீங்கள் எந்த விடுதியில் தங்கி இருக்கிறீர்கள் என்பதை அறிந்த, நாங்கள் இங்கேயே தங்கி விட்டோம். உங்களுடைய நிழலாவது என்னுடைய சினேகிதி மேல விழுந்து அவளுக்கு சுகம் கிடைக்கும் என்று நினைத்தோம்." ஒ என்னே. நான், "அவளுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது?" என்று கேட்டேன். "அவளுக்கு மன நோய் உள்ளதால், நான் இங்கு கொண்டுவந்தேன் என்று அவள் சொன்னாள்" 36. இது கட்டு கதை இல்லை, அந்த சிறந்த விசுவாசத்தில் நான் நின்றுகொண்டிருக்கும் போது, உண்மையான விசுவாசத்தில் இருந்த எனக்கு ஒரு காட்சி வெளிப்பட்டது. நான் சொன்னேன், "ஆமாம், நீங்கள் வட டெக்சாஸ் பகுதியில் லப்பக் (Lubbock) என்னும் இடத்திலிருந்து வருகிறீர்கள்." நான் சொன்னேன், "நீங்கள் அவளை மஞ்சள் நிற புயிக் (Buick) காரில் கொண்டு வந்தீர்கள், நீங்கள் வரும் வழியில் சாலையில் பாதி கான்கிரீட் போட்டும், மற்ற பாதி தார் போடப்பட்டிருந்தது. "நான் சொன்னேன், "மூலையில் வண்டியை திருப்பும் போது, நீங்கள் இரண்டு பேரும் சிரித்துக் கொண்டிருந்தீர்கள், தலை கீழாக விழுந்து, விபத்துகுள்ளானீர்கள்." அவள் பயங்கரமாக கூச்சலிட்டாள். மேலும் நான், "கர்த்தர் உரைக்கிறதாவது; அவள் சுகம் பெற்றாள்" என்று சொன்னேன். அது சரி மற்றும் அங்கே....... மறுநாள் அவள் அந்த நகரத்தை இந்த நெருப்பினால் கொழுத்தி விட்டாள். அவள் சாத்தானின் கூட்டைக் கிளறி விட்டாள். நான் சொல்லுகிறேன், சாத்தானை கிளற வேண்டும் என்றால் வெறும் தெய்வீக சுகமளித்தலை பற்றி போதித்தால் மட்டும் போதாது. பெந்தேகோஸ்தே நாளில் பேதுரு பிரசங்கம் பண்ணின போது 3000 ஆத்துமாக்கள் இரட்சிக்கபட்டார்கள், மற்றும் சாத்தான் அசையவேயில்லை. ஆனால் இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு, அலங்கார வாசலிலே ஒரு முடவனை சுகமளித்த போது, எல்லா நரகமும் அவன் மீது கட்டவிழ்க்கப்பட்டது. அது சரிதானே. சாத்தானுக்கு தேவனுடைய வல்லமை வெளிப்படுவதை பார்க்க பிடிக்காது. அவன், அவனுக்கு அதிக வல்லமை உண்டு என்று யோசிக்கிறான். ஆனால் அவன்_ அவன் முடிந்தான். ஆமென் நம் கிறிஸ்து முக்கியமானவர். முந்திக்கொள்ளுங்கள்; அவன் எதையாகிலும் உங்கள் மேல் புகுத்த விடாதீர்கள். 37. அதே நாளில் ......இரண்டு நாட்களுக்கு பிறகு அந்த சிறிய பெண்கள் வந்தார்கள்.......சகோதரர் பாக்ஸ்டர் உள்ளே வந்து சொன்னார், சகோதரன் பிரன்ஹாமே "நெருப்பில் என்னை ஊற்றப்படுகிறது." என்று கேட்டேன். நான்" என்ன பிரச்சினை" என்று கேட்டேன். "ஓ" அவர்கள் சொல்லுகிறார்கள், "நீர் சிமியோன் என்னும் மந்திரவாதி என்று, உம்மை இன்றிரவு காண்பிக்க போகிறார்கள்" என்று சொல்லுகிறார்கள். நான் சொன்னேன் ஓ "அது அப்படி இருக்கிறதா?" சொன்னார்கள், "ஆமாம்" சொன்னார்கள் "சகோதரர் பிரன்ஹாமே, இந்த பட்டணம் முழுவதும் அட்டைகளை வைத்துள்ளனர்" மற்றும் சொன்னார். "அந்த இரண்டு பெண்கள் தெரியுமா, அதில் அந்த சுகம் பெற்ற பெண்? நான் சொன்னேன் "ஆமாம்" சொன்னார்கள், "அவர்கள் கீழ் தடத்தில் அழுது கொண்டு தங்கள் துணிகளை எடுத்து கொண்டு போவதற்கு தயாராகிறார்கள்." என்று "ஒ" அது பரிதாபமாக இருக்கிறது, சகோதரன் பிரன்ஹாம்." என்று சொன்னார்கள். நான், "என்ன காரியம்?" என்று கேட்டேன் . அவர் சொன்னார், "நல்லது" அவர்கள் சொன்னார்கள், அவர்கள் சாட்சியினால் தான் இந்த மோசமான பிரகடனம் இந்த இடத்தில் கிளரப்பட்டிருக்கிறது, அதனால் அவர்கள் அதை வெறுக்கின்றனர். அவர்கள் மெத்தடிஸ்ட் ஆகையால் "அவர்கள் இப்படிபட்டதான காரியம் கிளரப்பட்டுள்ளது, ஆகையால் அவர்கள் செல்வதற்கு புறப்படுகிறாகள் .....அந்த FBI என்று சொல்லக்கூடிய புலன் விசாரணை கூட்டாட்சி பணியகம் உள்ளது, அதிலிருந்து, அவர்கள் இன்றிரவு நீர் அந்த மந்திரவாதி சிமியோன் என்று உங்களை வெளிபடுத்த போகிறார்கள் " என்று கூறினார்கள் "நல்லது, "நான் சொன்னேன், "அது சரியாக இருக்கும் என்று சொன்னால் என்னை வெளிப்படுத்தப்பட வேண்டியது தான் "பாருங்கள் ? நான் சொன்னேன்" கண்டிப்பாக." அவர் சொன்னார், "நல்லது நீங்கள் கீழே அவர்களிடம் போய் பேசினால் நலமாக இருக்கும்" என்று சொன்னார்கள், "அவர்கள் கீழ்மாடியில் இப்போது உள்ளனர்" என்று சொன்னார்கள். 38. நான், "அவர்கள் எந்த அறையில் இருக்கின்றனர்?" என்று கேட்டேன். அவர் அந்த அறையை பற்றி விளக்கினார்கள். மற்றும் நான் சென்று கதவை தட்டினேன், அவர்கள் அழுது கொண்டு தங்கள் துணிகளை பிரயாணத்துக்கு அடுக்கிக் கொண்டிருந்தார்கள் . "ஓ" சகோதரர் பிரண்ஹாமே எங்களை மன்னிக்கவும். நான் சொன்னேன், "எதற்காக மன்னிக்கவேண்டும் என்று சொன்னீர்கள்?" நான் சொன்னேன்....... அவள் சொன்னாள், "ஒ, நாங்கள் உங்களுக்கு அதிக உபத்திரவம் வருவதற்கு காரணமாகிவிட்டோம், நாங்கள் உங்களை அதிக பிரச்சனைக்குள் ஆக்கிவிட்டோம்." நான் சொன்னேன், "அப்படிதான் செய்திருக்கிறீர்கள்? யாரோ ஒருவர் சுகம் பெறுவதற்கு காரணமாக இருந்திருக்கிறீர்கள்? "நான் சொன்னேன் நீங்கள் என்னை எந்த பிரச்சனைக்குள்ளும் ஆக்கவில்லை, நீங்கள் அந்த பிசாசை தான் பிரேச்சனைக் குள்ளாக்கினீர்கள். நான் "அது........அவன் தான் பிரச்சனைக்குள்ளாக இருக்கிறான். நான் அல்ல" என்று சொன்னேன். மற்றும் அவள் சொன்னாள், "நல்லது, சகோதரன் பிரன்ஹாமே, எங்களை மன்னிக்கவும் என்று சொன்னாள்." நாங்கள் ஒரு பெண்மணி உடன் இன்று உட்கார்ந்திருந்தோம், மற்றும் அவள், "நீங்கள் அந்த பிரன்ஹாம் குழுவோடு தானே இருக்கிறீர்கள்?" என்று கேட்டாள். நாங்கள் சொன்னோம், "இல்லை அம்மையாரே." அவள் சொன்னாள், "ஓ, ஆமாம் நீங்கள் அவரோடுத்தான் இருக்கிறீர்கள்." சொன்னோம், "இல்லை, அந்த இரவு அந்த ஹோட்டலில் சுகம் பெற்றேன்." "கேளுங்கள், அந்த மனிதன் ஒரு சூனியக்காரன்" என்று சொன்னாள். "எங்களுக்கு அது தெரியும்." "ஏன், "அவள் சொன்னாள், "இங்கே இந்த பெண் என்னுடைய சினேகிதி ,அவள் என்னோடே, ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு செல்ல விருந்தது. அவளை பரிசோதித்து பாருங்கள். அவள் முழுமையாக நலமுடன் இருக்கிறாள்." அவள் சொன்னாள், " ஓ , எனக்கு தெரியும். நான் ஒரு பையனை அந்த கூட்டதிற்க்கு ஒரு முறை அனுப்பினேன். அவனுக்கு காச நோய் இருந்தது. மற்றும் அவர் அங்கு சென்று ஏதோ மந்திர வித்தை செய்து "சொன்னார்" இந்த குழந்தை காச நோயிலிருந்துக் விடுதலை பெற்றான். ஆனால் அது பிசாசானவன்? 39. சாத்தானுக்கு ஒரு வல்லமையும் கிடையாததை பற்றி யாருக்குமே ஒன்றும் தெரியாது. ஒரு சுகத்தையும் தரமுடியாது. அதை நான் சவால் விடுகிறேன். ஒருவேளை அவனுக்கு சுகம் தரமுடியும் என்றால் அவன் தேவனோடு தீய நோக்கத்தோடு திட்டம் வகிப்பான். "எல்லா நோய்களையும் சுகப்படுத்துகிற தேவன் நானே." சாத்தானுக்கு .....வல்லமை கிடையாது. எகிப்தியர்களோடு இருக்கக்கூடிய மிக பெரிய போட்டி அது தான், அவர்கள் குறிசொல்பவர்களை கொண்டு வந்தார்கள். அவர்கள் அநேக காரியங்களை செய்தார்கள், ஆனால் வியாதியிலிருந்து சுகமளிக்க முடியவில்லை. ஒவ்வோரு முரையும் அந்த மந்திரவாதிகள் ஏதாவது செய்தால், அது மோசே செய்த அதிசயத்தை போன்ற மாதிரியாக தான் இருந்தது.......அவர்கள் செய்வார்கள். ஆனால் அதை மீண்டும் எடுக்க முடியாது. ஆகையால் அது என்ன காண்பிக்கிறது என்றால், தேவன மட்டும் தான் சுகத்தை அளிக்க முடியும். 40. ஆகையால் அவள் சொன்னாள், "எங்களை மன்னிக்கவும். நாங்கள் வீட்டுக்கு செல்கிறோம்." மற்றும், "நாங்கள் மிகவும் வருத்தப் படுகிறோம், எங்களை மன்னிக்கவும்" என்று சொன்னாள். நான் சொன்னேன், "இப்போது பார், உனக்கு, அந்த பெண் சுகம் பெற்றாள்" என்று தெரியும். "ஆமாம்" என்றாள். நான் சொன்னேன், "தேவன் சுகம் தருவதில் மிகவும் அற்புதமானவர் அல்லவா? "ஆமாம்" என்று அவள் சொன்னாள். நான் சொன்னேன், "நீ அவர் போரிடுவதை பார்க்க வேண்டும். ஓ என்ன, அவர் அற்புதமானவர்." நான் சொன்னேன், "நீங்கள் அங்கே போக கூடாது." நான் சொன்னேன், "நல்லது, நான் ஓட விட கூடாது என்று எதிர்பார்க்கிகிறீர்கள் அல்லவா?" நான் சொன்னேன், "நிச்சயமாக நான் அங்கே போக போகிறேன். " அவள் சொன்னாள், "சகோதரன் பிரன்ஹாம், அந்த புலன் விசாரிப்பு கூட்டாட்சி பணியகம், உங்களை காட்டிக்கொடுக்க போகிறார்கள்." நான் கேட்டேன், "எதை காட்டிக் கொடுக்கப் போகிறார்கள்? அவர்கள் காட்டி கொடுப்பதற்கு என்ன இருக்கிறது?" நான் சொன்னேன், "என்னை காட்டி கொடுப்பதற்காகவே நான் மிகவும் முயற்சி செய்கிறேன். ஏனென்றால் சுவிசேஷம் எல்லாருக்கும் செல்வதற்கு என்னால் எவ்வளவு முயற்சி செய்ய முடியுமா அவ்வளவு முயற்சி செய்கிறேன்." நான் சொன்னேன், "எனக்கு உதவி செய்வதற்காக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்." அவர்கள் கேட்டார்கள், "நீங்கள் அங்கே செல்ல போகிறீர்கள், அப்படிதானே." 41 நான் சொன்னேன், "நிச்சயமாக" நான் சொன்னேன், "அந்த போரில் தேவன் என்ன செய்ய போகிறார் என்று பார்ப்பதற்கு வாருங்கள்." ஒரு முறை அவர் போர் செய்வதை பாருங்கள், என்ன - அங்கே அவர் எவ்வளவு சிறந்தவர் என்று பார்க்கவேண்டும். "நான் சொன்னேன், ஓ அவர் போர் செய்வதில் மகத்துவமுள்ளவர்." நான் சொன்னேன், "அவர் போரில் இதுவரைக்கும் வந்ததாக தெரியவில்லை, ஆனால் அவர் வெற்றியோடு வெளியே வருவது என்னவாக இருக்கும். அவரை நரகத்தில் போடும்போது கூட, அவர் தன்னுடைய தலையை சாய்த்தார். ஓ , தன்னுடைய குதிகாலை சாத்தான் கழுத்தில் வைத்து, மரணத்தின் சாவியை அவனிடம் இருந்து எடுத்துக் கொண்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்; மரணத்தில் கூட அவர் வெற்றி சிறந்தார். சொன்னார், "சாத்தானிடம் ஒன்றுமே இல்லை." நல்லது நான் அங்கே சென்றேன். மற்றும் அந்த இரவு, நான் அங்கே சென்றபோது, அந்த பாதுகாவலர், சில ஸ்பானிய சிறு பையன்களை கூப்பிடுகிறதற்கு அனுப்பினார். சொன்னார், "தெய்வீக சுகம் அளிப்பது ஒருவேளை சரியாக இருந்தாலும்; சிமியோன் என்னும் மந்திரவாதி அந்த வேலையில் இன்னும் இருக்கிறான் என்பது ஜெபத்தினால் எழுதப்பட்டிருந்தது. மற்றும் நான் அங்கு நடக்கையில்.........நான் சொன்னேன், " சகோதரன் பாக்ஸ்டர், நீங்கள் எல்லாரும் இந்த கட்டிடத்தை விட்டு வெளியே செல்லுங்கள்; பின்னாலே செல்லுங்கள்." அங்கே 3000 அல்லது 4000 அல்லது 5000 ஜனங்கள் இருந்தார்கள். சற்று அந்த கூட்டம் முடியும் போது, நான் சொன்னேன், "என்னிடம் ஒரு சரியாக சீட்டு இருக்கிறது, அதில் என்னை சிமியோன் என்னும் மந்திரவாதி என்று சொல்லப்பட்டிருக்கிறது, மற்றும் அந்த புலன் விசாரணை குழு என்னை வெளிப்படுத்த போகிறார்கள் என்று காண்பிக்கிறது." நான் சொன்னேன், "நாம் அந்த காரியத்தை இப்பொழுதே நம் கரங்களை விட்டு வெளியே போக செய்வோம். வாருங்கள் என்னை காட்டிக் கொடுக்கப் போகிற நீங்கள் என்னை வெளிப்படுத்துங்கள். நீங்கள் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்." நான் கொஞ்ச நேரம் காத்திருந்தேன். மற்றும் நான் சொன்னேன், "நீங்க எல்லாரும் என்ன யோசிக்கிறீர்கள்? ஏன் இங்கே வர விரும்பவில்லை? நான் காத்திருந்தேன், அது என்னவாக இருக்கும் என்று ஆச்சரியப்பட்டேன். அதெல்லாம் என்னவென்று ஒன்றுமே தெரியவில்லை 42. எனக்கு வலது பக்கம் அந்த மூலையில் ஒரு பெரிய கருப்பு நிழல் அங்கே நின்று கொண்டிருந்ததை நான் கண்டேன். "அது எதற்கு அங்கு நின்றுகொண்டிருக்கிறது?" என்று வியந்தேன். நான் மீண்டும் திரும்பி பார்த்தேன், அது அங்கிருந்து அப்படியே நகர்ந்து சென்று, ஜனங்களை கடந்து, மேலே பால்கனி நோக்கி சென்றது, மேலும் அது நீல நிற சூட் அணிந்த ஒருவர் மீதும், சாம்பல் நிறம் அணிந்த ஒரு மனிதன் தலைமேல் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு வெளிப்பாடு தென்பட்டது. நான் சொன்னேன், "அது அந்த புலனாய்வு துறையிலிருந்து வந்தவர்கள் அல்ல, அங்கே பின்னால் உட்கார்ந்துகொண்டு இருந்தது இரண்டு பின்வாங்கி போன போதகர்கள்." அவர்கள் இப்படியாக வெளியே செல்வதற்கு எழுந்தார்கள், நான் சொன்னேன், "நீங்கள் கீழே செல்ல வேண்டாம். "நான் சொன்னேன், இப்போது........." மற்றும், டெக்சாஸில் உள்ள, மூன்று அல்லது நான்கு பெரிய பயில்வான்கள் அவர்களை பிடிப்பதற்கு சென்றார்கள். நான் சொன்னேன், "இல்லை, இல்லை, இல்லை. அவர்களை ஒன்றும் செய்யாதீர்கள். இது மாம்சத்தோடும், ரத்தத்தோடும் உள்ள காரியம் அல்ல, அவர்களை அப்படியே விட்டு விடுங்கள் காரணம், அவர்கள் தங்கள் கழுத்தில் கயிற்றை கட்டி கொண்டார்கள். ஆகையால் நான் சொன்னேன், "அப்படி அவர்களை செய்யாதீர்கள்." ஆனால் நான் உங்களுக்கு ஒரு காரியத்தை காட்டுகிறேன். நான் மந்திரவாதியாகிய சிமியோனாக இருப்பேன் என்றால், என்னை வெளிப்படுத்தியாக வேண்டும். நான் மந்திரவாதி சிமியோனாக இருப்பேன் என்றால், நீங்கள் இந்த மேடைக்கு வாருங்கள். நான் மட்டும் மந்திரவாதியாகிய சிமியோனாக இருப்பேன் என்றால், இங்கே இந்த மேடையில் செத்துப் போவேன். மற்றும் நான் தேவனுடைய மனிதனாக இருப்பேன் என்றால், நீங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில், நான் தேவனுடைய மனிதன், ஆகையால் நீங்கள் இந்த மேடையில், மரித்து போவீர்கள். மற்றும் சபையார் எல்லாரும், யார் சரியாக உள்ளனர் என்றும், யார் தவறாக இருக்கின்றனர் என்பதை பார்க்கட்டும். மற்றும் தேவன் யார் சரியாக இருக்கிறார்கள் என்பதை சாட்சி பகர்வார். ஆகையால் அவர்கள் சிறிது நேரம் அங்கே உட்கார்ந்தார்கள், நான் சொன்னேன், "நல்லது, நாம் ஒரு பாட்டு பாடுவோம்." நான் பாட ஆரம்பிக்கும் போது, அவர்கள் எழும்பி பக்க வழியில் வெளியே சென்றார்கள். நாங்கள் 30 நிமிடம் அவர்களுக்காக காத்திருந்தோம், ஆனால் ஒருவரும் மேலே வரவில்லை, அதற்கு பிறகு, அவர்கள் வரவே இல்லை. நிச்சயமாக. 43. நான் சொன்னேன், "எல்லா இடங்களிலும் இப்படிப்பட்டதான காரியங்கள் நிமித்தம், நான் நொந்து போய் விட்டேன். தேவன் இந்த போரில் மகா பெரியவராய் இருக்கிறார். அவர் உன்னை அனுப்பும்போது நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்கள் சும்மா நின்று தேவனுடைய இரட்சிப்பை பாருங்கள். சொன்னேன், சும்மா நில்லுங்கள். "ஒரே ஒருவர் மாத்திரம் தான் இரட்சிப்பை கொண்டு வர முடியும், அது தேவன். அவர் "இப்போது, நீங்கள் சும்மா நின்று, தேவன் கொண்டு வரும் இரட்சிப்பை பாருங்கள் " என்று சொன்னார். இதோ, தேவனுடைய சேனை வருகிறது. ஓ அதைப்பற்றி நான் நினைக்கும் போது.........பரவசம் அடைகிறேன். இதோ அந்த சேனை வருகிறது, அதின் புழுதி கர்ஜிக்கிறது. மற்றும் மோசே தேவனுடைய இரட்சிப்பை காண்பதற்காக சும்மா நின்று பார்க்கும் போது, அந்த பெரிய அக்கினி ஸ்தம்பம் அவர்கள் முன்னால தொங்கிக் கொண்டிருந்தது, அது அவர்களை இந்த கண்ணிக்குள் அகப்பட செய்தது. அது கடந்து சென்று இஸ்ரவேலர்களுக்கும், பார்வோன் சேனைக்கும் நடுவாக நின்றது. மற்றும் அவர்கள் அந்த வெளிச்சத்தை உதறி தள்ளிவிட்டனர். மற்றும் எந்த மனிதன் அந்த வெளிச்சத்தை புறக்கணிக்கிறானோ, அவர்களுக்கும் இதே கதி தான் ஏற்படும். அது அவர்களுக்கு நடு இரவு இருட்டை போல் ஆகிவிட்டது. எந்த வெளிச்சம் இஸ்ரவேலருக்கு வெளிச்சத்தை தந்துக் கடந்து போக செய்தததோ, அதே வெளிச்சம் பார்வோனையும் அவன் சேனையும் குருடாக்கி போட்டது. மற்றும் உங்களால் புத்தி இல்லாதது என்று சொல்லக்கூடிய அதே பரிசுத்த ஆவியின் சுவிசேஷமானது, சபையை மகிமைக்குள் கொண்டு சென்று இந்த நவீன இறையியல் போதகர்களின் கண்களை குருடாக்கி போட்டது. 44. இயேசு கிறிஸ்துவை, உயிர்த்தெழ செய்த அதே பரிசுத்த ஆவியின் வல்லமை தான், இங்கு நின்று கொண்டு, இந்த கட்டிடத்தில் இந்த இரவு, இந்த நவீன காலத்து போதகர்களையும் மற்றும் அவர்கள் சபையையும் குருடாக்கி போட்டது. மற்றும் அந்த காரியம் தான், இயேசு கிறிஸ்துவின் உயர்த்தெழுதல் துவங்கி மற்றும் பெந்தேகோஸ்தே நாளையிலிருந்து குருடாக்கப்படிருந்த அவர்களை வெளிச்சத்தில் கொண்டு வந்தது. (அல்லேலூயா) தேவன் அதை செய்வார். உங்களால் அதை விவரிக்க முடியுமா? ஆனால் நீங்கள் அந்த வெளிச்சத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அது உங்களுக்கு இருட்டை உண்டாக்கிவிடும். அதை நீங்கள் குற்றம் சொல்வீர்கள். மேலும் அதை பரிசுத்த உருளையர்கள் என்று சொல்வீர்கள். அதற்கு பதிலாக, நீங்கள் உங்கள் கழுத்தில் எந்திர கல்லை கட்டி, ஆழ்ந்த கடலில் மூழ்குவது நலமாய் இருக்கும். நீங்கள் பரிசுத்த ஆவியை பற்றி தேவதூஷனம் சொல்லுவீர்கள். அதற்கு மன்னிப்பு கிடையாது. சொன்னேன், "மனுஷகுமாரனுக்கு விரோதமாக பேசப்படும் எந்த வார்த்தையும் மன்னிக்கபடும், ஆனால் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பேசப்படும் எந்த வார்த்தைக்கும் மன்னிப்பு கிடையாது. ஆனால், ஓ! உங்களுக்கு அதிகம் தெரியும், ஆகையால் நீங்கள், தெய்வீக சுகமளித்தளையும், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழு தலையும், தேவனுடைய வல்லமையும், மற்றும் தேவனுடைய ஆவியைப் பெற்றவர்களை கேலி செய்து, உங்கள் மூக்கை திருப்பிக் கொண்டு, ஆலயத்தை விட்டு வெளியே சென்றீர்கள். இந்த செய்தியை அனுப்பின இராஜா முன்பாக, நீங்கள் நிற்கும் போது உங்களுக்கு என்ன நடக்கும் என்று நான் பார்க்க வேண்டும். அஹ், ஓ. உங்களுக்கு பெரிய காரியம் கிடைத்து விட்டது என்று நினைக்கிறீர்களா? அந்த நாள் வருவதற்காக கொஞ்சம் பொறுங்கள், இது மனுஷனுடைய நாட்கள், தேவனுடைய நாள் வந்து கொண்டிருக்கிறது அது சரியா. 45. எவ்வளவு மகத்துவமாக இருக்கிறது என்று கவனியுங்கள். அந்த மாதிரியே........நான் ......ஓ, செய்து போனால் நான் இதிலிருந்து விலகிக் கொள்வது நல்லது. தேவன் தம்முடைய வல்லமையில்.........ஒரு கணம் பொறுங்கள். தேவன் தம்முடைய வல்லமையில் அசைவாடிக் கொண்டிருக்கிறார், அவர் சொன்னார் மோசே ஏன் என்னிடத்தில் முறையிடுகிறாய். உன் கோலை எடுத்துக்கொண்டு, உன் கரங்களை உயர்த்தியவாறு முன்னேறி செல், அல்லேலூயா. இதோ மோசே செல்கிறார், அந்த கோலை தம் கரத்தில் வைத்துக் கொண்டு, மற்ற கையை உயர்த்தி, சொல்லுகிறார் நாம் வெளிச்சத்தில் நடப்போம் என்ன ஒரு அழகான வெளிச்சம் அது இரக்கத்தின் பனித்துளிகள பிரகாசமாக இருக்கும் இடத்தில் வரும். தேவனுடைய தூதர் ஒரு அக்னி ஸ்தம்பத்தின் மூலமாக முன்னே சென்று கொண்டிருந்தார். அவர்களை சரியா அந்த கரைக்கு அழைத்துக் கொண்டு சென்றார், மற்றும் அவர்கள் அங்கு சென்றவுடன் அவர் அவர்களுக்கு மதிலாக நின்றார், மற்றும் அவர்கள் அந்த கண்ணியில் இருந்து விடுபட்டு நடந்தார்கள். தேவன் தம்முடைய அன்பையும் வல்லமையும் வெளிப்படுத்தினார். எப்போது ஒரு உதவியும் பெற முடியாத சமயத்தில்....... ஆமென். 46, சாத்தானின் வல்லமை: ஒரு எல்லைக்குட்பட்டது. விசுவாசத்தின் வல்லமையானது தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வெளிபாட்டை நடைமுறையில் கொண்டு வருகிறது. எவர்களுக்கு தங்களாலே உதவி செய்யமுடியவில்லையோ அவர்களுக்கு தேவன் உதவுகிறார். தேவனை மதிக்காத ஒரு பழைய பழமொழி ஒன்று உண்டு. "யாரெல்லாம் தங்களுக்கே உதவி செய்ய முடிகிறதா, அவர்களுக்கு கடவுள் உதவுகிறார்......எவ்வளவு கேலித்தனமாக இருக்கிறது. யார் யார் எல்லாம், தங்களுக்கு உதவி செய்ய முடியாமல் இருக்கின்றனரோ அவர்களுக்கு தேவன் உதவி செய்கிறார். ஆமென். ஓ, அவர் அற்புதமானவர் அல்லவா? தேவனுடைய வல்லமையானது என்ன செய்கிறது. தேவனுடைய வல்லமை மட்டும் தான் நித்திய ஜீவனை கொடுக்கும். தேவனுடைய வல்லமை மட்டும் தான் காரியம். தேவனுடைய வல்லமை தான் ஒரு மரத்தை உண்டாக்கியது. உலகத்தில் உள்ள அவ்வளவு விஞ்ஞானமும் ஒரு மரத்தை உண்டாக்க முடியாது. தேவனுடைய வல்லமை தான் மரத்தை உண்டாக்கியது. தேவனுடைய வல்லமை என்னை உயிரோடே வைத்திருக்கிறது. 47. ஒரு வேளை தேவன் உன்னை அழைத்திருப்பார் என்றால், இந்த உலகத்திலுள்ள எல்லா மருத்துவமனைகளும், ஆக்சிசன் கூடங்களும், தள்ளு மோட்டார்களும் உங்களை இங்கு தக்க வைக்கமுடியாது. இரட்சிப்பு தேவனுடையது. தேவனுடைய வல்லமை தான் ஒரு சிட்டு குருவிக்கும் உணவு அளிக்கிறது. அந்த மேலே உள்ளே சிறிய வாத்தினிடம் பேசுவது தேவனுடைய வல்லமை தான். யாரும் மேலே சென்று, அவைகளை அந்த ஏரிக்கு நேரே "ஷூ" என்று விரட்டி, "கீழே லூஸியானாவுக்கு போ" என்று சொல்வதற்கு அங்கு யாருமில்லை. இல்லை ஐயா, அது தேவனுடைய வல்லமை தான் அவைகளை "ஷூ" என்று விரட்டுகிறது. அந்த வாத்து குஞ்சிக்கு எந்த வழியில் செல்வது என்றே தெரியாது. அது தேவனுடைய வல்லமையானது தென் திசையில் செல்வதற்கு வழி நடத்துகிறது. அல்லேலூயா. தேவனுடைய வல்லமை தான் அவர்களை இயேசு கிறிஸ்துவுக்கு நேராக வழி நடத்துகிறது. தேவனுடைய வல்லமை தான் அந்த ஞானிகளை தொட்டிலுக்கு நேராக வழி நடத்துனது. தேவனுடைய வல்லமை தான் ஒவ்வொரு விசுவாசியின் ஆன்மாவை துள்ள செய்கிறது. ஆமென். தங்களுக்கு தாங்களே உதவி செய்ய முடியாதவர்களுக்கு, தேவனுடைய வல்லமை தான் உதவி செய்கிறது. ஆமென். நான் முடிப்பதற்கு முன்பாக, ஒரு சிறு கதை சொல்கிறேன். நீங்கள் அந்த புத்தகத்தை வாசித்திருப்பீர்கள். நான் ஒரு வேட்டைக்காரன் என்றும், காடுகளை நேசிப்பவன் என்று உங்களுக்கு தெரியும். இங்கே சில மாதங்களுக்கு முன்பு, மூன்று மாதங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன். நான் எனது மாணவர்கள் என்று சொல்லக்கூடிய லியோ (Leo, மற்றும் Gene) என்பவர்களுடன் உட்கார்ந்துகொண்டு இருந்தேன். அவர்கள் இந்த இடத்தை சுற்றி உள்ளவர்கள் அவர்கள் கீழே வந்து என்னோடே இருப்பார்கள். அவர்கள் அந்த வராண்டாவில் உட்கார்ந்து நான் அவர்களுக்கு தேவனை பற்றி உபதேசித்துக் கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்தார்கள். 48. எங்கள் ஊரில், ஒரு வாலிப பெண், ஒரு குழந்தையை பெற்றிருந்தாள், மற்றும் அவளுக்கு அந்த குழந்தை தேவைப் படவில்லை. அந்தப் பெண் ஒரு மிகவும் அழகான பெண். அந்த குழந்தையை எடுத்து ஒரு போர்வையில் சுற்றி, ஒரு கயிற்றால், அதை சுற்றி, வாடகை வண்டியில் எடுத்துக்கொண்டு, அந்த பாலம் கிட்டே சென்று, அந்த குழந்தையை ஆற்றில் வீசினாள். அவளை பிடித்தார்கள். நானும், திரு மற்றும் திருமதி வுட் (Wood) அவர்களும், புத்தகத்தை விற்பவரும், இங்கே உட்கார்ந்து கொண்டு, அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அவர்கள் அங்கே வசிக்கும் என்னுடைய அண்டை வீட்டுக்காரர்கள் பால்காரன் அப்பொழுது தான் வந்து சென்றான். அந்த காலை வேலையில், அந்த வராண்டாவில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, அங்கே உஷ்ணமாக இருந்தது. மேலும் நான் கவனித்துக் கொண்டிருக்கும் போது, அந்த சாலை வழியாக ஒன்று திரும்பி வந்து கொண்டிருந்தது. ஆர்டிக் ஸ்பிரிங்ஸ் (Arctic Springs) என்று சொல்லக்கூடிய ஒரு காட்டுக்கும், நான் தங்கியிருக்கும் அந்த வீட்டுக்கும் இடையே நான்கு வீடுகள் இருந்தன. இதோ அங்கே ஒரு வயதான ஒப்போசம் (opossum- ஒரு வகையான பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது) தன்னை இழுத்துக் கொண்டே வந்தது. வேலி இல்லாத ஒவ்வொரு இடத்துக்கும் அது சென்று மற்றும் அது எனது இடத்துக்கு திரும்பி பார்த்து வர ஆரம்பித்தது, எனது இடத்தில், ஒரு பாறையினால் ஆன சுவரும், வேலியும் இருந்தது. அவன் அந்த_ உள்வாழில் என்னை நோக்கி வர ஆரம்பித்து விட்டான். 49. நல்லது, நான் மிருகங்களை நன்கு புரிந்து இருப்பவன். அவற்றை பற்றி அதிகம் நான் கற்றிருக்கிறேன். நான் ஒரு கேம் வார்டனாக பல வருடம் வேலை பார்த்து இருக்கிறேன். மற்றும் வன விலங்குகளை மிகவும் நேசிப்பவன். அதினுடன் வாழ்ந்தவன் அவர்களை பற்றி படித்திருக்கிறேன். மற்றும் ஒரு ஒப்போசம், பகல் நேரத்தில் குருடாக இருக்கும், இரவில் மட்டும் தான் அது பிரயாணப்படும். பகல் நேரத்தில் அது பிரயாணப்படாது, அதை யாராவது சீண்டினாலோ, அல்லது காட்டை விட்டு வெளியே வந்தால் மட்டும், அது பகல் நேரத்தில் பிரயாணப்படும். நல்லது, இதோ அந்த ஒப்போசம் வந்துகொண்டிருந்தது. அது எனது வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்ததை குறித்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் சொன்னேன், "அதற்கு ஒரு வேளை ரேபிஸ் (rabies) என்று சொல்லக்கூடிய வெறி நாய் கடித்தால் ஏற்படும் நோய் இருக்கலாம்." ஆகையால் லியோவிடமும் ஜீனிடமும், "நான்.......சென்று அங்கு சகோதரன் வுட் உபயோகித்த மூட்டுதல் என்னும் புற்களை அகற்றும் கருவி (rake) ஒன்றை கொண்டு வந்து அந்த ஒப்போஸத்தின் மேல் வைத்தேன். பொதுவாக "விளையாட்டு ஒப்போசம்" என்று சொல்லக்கூடிய ஒன்று அப்படியே பரந்த புன்னகையுடன் படுத்துகொள்ளும். ஆனால் அது அப்படி செய்யாமல் அந்த மூட்டுதலை கடித்து விட்டது. நான் ஆச்சரியபட்டேன். "நல்லது" நான் சொன்னேன், "அதற்கு ரேபிஸ் அல்லது அது மிகவும் அடிபட்டு இருக்கலாம் என்று யூகிக்கிறேன் என்றேன். நான் பார்த்த போது அதின் மேல் ஈக்களின் முட்டைகள் உடம்பு முழுவதும் இருந்தது. சொல்வதற்கு அருவருப்பாக உள்ளது. மற்றும் அதின்மேல் அந்த பச்சை நிற ஈக்கள் ஒட்டிக் கொண்டடிருந்தது. மற்றும் அதின் ஒரு காலை ஒரு நாய் மென்று தின்றதுபோல் இருந்தது. அல்லது _ அல்லது ஒரு வண்டி அதின் மேல் ஏறி இருந்திருக்கலாம். அல்லது ஏதோ ஒன்று அதன் காலை ஒடிந்து போக செய்திருக்கலாம். அது அந்த ஒடிந்த காலை இழுத்து கொண்டு வந்தது. நல்லது, அது .....அப்படி கடித்து கொண்டு இருந்தது. 50. அதின் மேல் அந்த மூட்டுத்தலை வைத்தவுடன்........அது மிகவும் களைத்துப்போய் இருந்ததை நான் கவனித்தேன். இப்போது, ஒரு கங்காரு, மற்றும் ஒரு ஒப்போசம் இன மிருகங்களுக்கு மட்டும் தான், தங்கள் குட்டிகளை வைப்பதற்கு, உடம்பில் பைகள் உள்ளன. நிச்சயமாக ஒரு நரம்பு போன்றவற்றால் அது இருக பிடித்து கொள்கிறது. மற்றும் அது மிகவும் கலைத்து போய் இருந்ததால் அந்த பை தளர்ந்து இருந்தது. மற்றும் நான், ஏன் அது இப்படி கடினமாக போராடவேண்டும் என்று நினைத்தேன்; அதற்கு அம்மனமாக இருக்கும் ஒன்பது குட்டிகள் இவ்வளவு நீளத்தில் இருப்பதை கண்டேன். அவைகளை அது கீழே இறக்கி விட்ட பின்பு, நல்லது நான் அந்த பையன்களிடம், "இங்கே வாருங்கள் நான் உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கிறேன் என்று சொன்னேன். அந்த குழந்தையை ஆற்றில் தூக்கி எரிந்த அந்த பெண்ணை காட்டிலும் இந்த ஊமை முரட்டு ஒப்போசத்திற்கு அதிக தாய்மை பற்று உண்டு." அது சரிதானே. நான் சொன்னேன், "அந்த இளம் அழகிய சுகாதாரத்தோடே இருந்த பெண், வீதியில் உள்ள வீடுகளுக்கு சென்று உல்லாசமாக இருப்பதற்கு, அந்த குற்றமில்லாத சிறு குழந்தையை ஆற்றில் எரிந்து விட்டாள், பாருங்கள். மற்றும் நான் சொன்னேன், "இந்த தாய் ஒப்போசம், இருபது அல்லது முப்பது நிமிடம் மட்டும் தான் உயிர் வாழ முடியும். அவள் உயிர்போகும் அளவிற்கு அடிபட்டு இருக்கிறாள். மற்றும் நான் சொன்னேன்" முப்பது நிமிடம் கூட உயிர்வாழ முடியாது, ஆனால் அந்த முப்பது நிமிடமும் இந்த குட்டிகள் உயிர் வாழ போராடிக்கொண்டு இருக்கிறாள். "நான், இந்த ஒப்போசத்திற்கு அந்த பெண்ணை காட்டிலும் அதிக தாய்மை பற்றும், ஒழுக்கமும் இருக்கிறது என்று சொன்னேன்." அது தான்.......ஒரு பெண் என்பது ஒரு அற்புதமான காரியம், ஆணும் கூட, ஆனால் எப்போது தேவனிடமிருந்து விலகி சென்றார்களோ, அவர்கள் மிருகங்களை காட்டிலும் கீழ்தரமானவர்கள். அது சரி தானே. ஒரு மிருகம் செய்யகூடாததை அவர்கள் செய்வார்கள். ஆகையால் நான் அதை கவனித்தேன். 51. மற்றும் நான் அந்த மூடுதலை அவளிடம் இருந்து எடுத்தேன். அவள் கொஞ்சமும் தயங்கவில்லை. உடனே அவள் எழுந்திருந்தாள், பின்பு சரியாக என் வீட்டு படிகட்டில் படுத்துக்கொண்டாள். நல்லது, நான் அங்கே சென்றேன், பின்பு நான் _ நான் அவளை கொஞ்சம் குத்தினேன், ஆனால் அவளோ அசையவே இல்லை. அவள் சென்றுவிட்டாள். அவர்கள், "அவள் மரித்துவிட்டாள்" என்று சொன்னார்கள். நான், "எனக்குத் தெரியாது" என்று சொன்னேன். அவள் மீது என்னுடைய கோலை வைத்ததேன், மற்றும் ஓ, இல்லை அவள் இறந்து போகவில்லை. அந்த பரிதாபத்திற்குரிய குட்டி ஒப்போசங்கள், அந்த தாயிடம், பாலை குடிக்க முயற்சித்துக்கொண்டிருந்தது. நல்லது, நான் பார்த்ததுலே, ஒரு அழகான தேவனால் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவள் தான் திருமதி வுட் (Wood) அவர்கள். அவர் விலங்குகளின் மருத்துவர் போல விலங்குகளை கவணிப்பார்கள். அவர்கள் சொன்னார்கள். "சகோதரர் பிரன்ஹாம், மனிதாபிமான ஒரே ஒரு காரியம் மட்டும் தான் அந்த அப்போசத்தை செய்ய முடியும் , அதை கொன்று விடுவதை தவிர வேற ஒரு காரியமும் செய்ய முடியாது. "நான் சொல்கிறேன் சகோதரன் பிரண்ஹாம், அந்த குட்டிகள் அந்த தாயிடம் பால் குடித்துக் கொண்டிருக்கிறது, மற்றும் அது மரித்து விட்டது, அல்லது ஒரு சில நிமிடத்தில் மரித்து விடும்" மற்றும் சொன்னார்கள், "அந்த குட்டிகள் மரித்து விடும் பாருங்கள், அவைகள் பட்டினியால் மரித்து விடும். மற்றும் சகோதரரே, ஒரே ஒரு காரியம் மட்டும்தான் செய்ய முடியும். அந்த வயதான தாயையும், குட்டிகளையும் கொன்று விடவும். காரணம் அவைகள் எல்லாவற்றையும் நீங்கள் பராமரித்து வளர்க்க முடியாது, அவைகள் சின்னஞ்சிறு பிராணிகள் அவைகளை நீங்கள் வளர்க்க முடியாது" 52. நான் சொன்னேன், "சகோதரி வுட் எனக்கு அது சரி என்று தெரியும். "ஆனால் என்னால் அதை செய்ய முடியாது." "ஏன்" என்று கேட்டார்கள், "நீங்கள் ஒரு வேட்டைக்காரன் அல்லவா?" நான் சொன்னேன், "ஆமாம், ஆனால் நான் ஒரு கொலைகாரன் அல்ல" நான் சொன்னேன் என்னால் - என்னால் அதை செய்யவே முடியாது." மற்றும் அவள்........நான் சொன்னேன் "அந்த ஒப்போசம்கள் சாப்பிடக் கூடியவை, ஜனங்கள் அவைகளை உண்பார்கள். மற்றும் அவைகள் உணவு பதார்த்தங்கள். நான் சொன்னேன், "நான் அனேகமா னவைகளை கொன்றிருக்கிறேன், ஆனால் அவைகளை உண்பதற்காக கொன்றிருக்கிறேன்." நான் சொன்னேன், "சும்மா கொல்வதற்காக நான் கொல்ல மாட்டேன்." அவள் சொன்னாள், "நல்லது, திரு பேங்க்ஸ் அவர்கள் அதை செய்யட்டும்." அவர் அவளுடைய கணவர், என்னுடைய அருமையான நண்பன். மற்றும், "பாங்க்ஸ் அதை செய்யட்டும்." என்று சொன்னாள். மற்றும் நான் சொன்னேன், "நான் - நான் அவர் அதை செய்வதற்கு விட மாட்டேன்." நல்லது அவள் அப்படியே சொல்லிக் கொண்டே போனாள், அவளாள் அதை மட்டும் தான் செய்ய முடியும். ஓ, அந்த நாள் அப்படியே நீடித்துக் கொண்டே சென்றது. நான் அந்த ஒப்போஸத்துக்கு உணவை கொடுக்க முயற்சி செய்து கொண்டே இருந்தேன். அவளோ கொஞ்சம் கூட அசையவில்லை. மற்றும் அந்த பரிதாபமான குட்டிகள் அந்த ஒப்போசத்திடம் அந்தப் பாலை குடிக்க முயற்சித்துக் கொண்டே இருந்தது. மற்றும் வெயில் அவள் மீது கொடூரமாக பாய்ந்து கொண்டிருந்தது. நான் நினைத்தேன், "ஒ என்னவொரு கொடூர காட்சி." மற்றும் அவளுடைய கால் இப்படியாக வீங்கி போய் இருந்தது, உடம்பு முழுவதும் அடிவாங்கி இருந்தது. அவள் உடம்பு முழுவதும் ஈக்கள் மொய்த்து கொண்டிருந்தது, அந்த ஈக்களை விரட்டுவதற்காக, நான் தண்ணீரை ஊற்ற முயற்சித்தேன், என்பது உங்களுக்கு தெரியுமா? மற்றும் அவைகள் மீண்டும் திரும்பி வந்து விட்டன. மற்றும் அதன் தசை அழுகி கொண்டிருந்தது. ஆகையால் நான்"அது மிகவும் கொடூரமாக காட்சியளிகிறது" என்று சொன்னேன். 53. ஆகையால் அது ஒரு நீண்ட இரவாக தென்பட்டது. சகோதரன் வுட்ஸ் அவர்கள் வந்து என்னிடம் சொன்னார், "நீங்கள் இந்த நாள் முழுவதும் ஜனங்கள் வருவதும், போவதுமான காரியங்களினால், களைத்துப் போய் இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு சிறு வண்டியை எடுத்துக்கொண்டு சவாரிசெய்யுங்கள்." ஆகையால் அவரும், அவருடைய மனைவியும், மற்றும் என்னுடைய மனைவி மற்றும் நானும் அந்த வண்டியில் ஏறி, நாங்கள் அந்த நகரத்தை சுற்றி வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தோம். மற்றும் நாங்கள் வண்டியை ஓட்டிக்கொண்டு வரும்போது, என்னுடைய மனைவி என்று நான் நினைக்கிறேன், அவள் திடீர் என்று "ஓ, அங்கு கிடக்கிற அந்த நாய்க்குட்டியை பார்த்தீர்களா?" என்றாள். மற்றும் நான் வண்டியை திருப்பி அதினிடம் சென்றேன். நல்லது, நான் அதை தூக்கிக் கொண்டு வரலாம் என்று சென்றேன். மற்றும் அந்த குட்டி நாய் இவ்வளவு நீளமும், உயரமுமாக இருந்தது. மேலும் அவன் மீது, தோல் சம்பந்தபட்ட ஒரு வியாதியினால் ஈக்கள் அப்பிகொண்டிருந்தது. அது அவனை தின்றுகொண்டிருந்தது. மற்றும் நான், "ஐயோ அந்த மிருகம் பரிதாபமாக இருக்கிறது" என்று சொன்னேன். சகோதரி வுட்ஸ் சொன்னார்கள் "நீங்கள் அதை கொல்லத்தான் வேண்டும், ஏனென்றால் அது மரித்து கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன்." நான் சொன்னேன், "அந்த பரிதாபமான ஜீவனை எனது வீட்டுக்கு எடுத்துச் செல்ல போகிறேன்." மேலும் கீழே சென்று அந்த தொற்று நோயை குணப்படுத்தும் மருந்து வாங்கி வந்தேன். மற்றும் சில மருந்து பொடியை தடவி அவனை சுகபடுத்தினேன். ஓ என்னே, அவன் இப்போது ஒரு பெரிய நாயாக சுகமுடன் இருக்கிறான். 54. ஆனால் நான் அன்று இரவு சுமார் 10:30 அல்லது 11 மணிக்கு நான் வீட்டிற்கு சென்ற போது, அந்த ஒப்போசம் இன்னும் அங்கேயே படுத்துகொண்டிருந்தது. சகோதரன் வுட்ஸ், "அது அசையவே அசையாது" என்று சொன்னார். அவர், "இருள் அடையும் போது அது சென்றுவிடும், ஆனால் இது இப்போது அசையவே முடியாமல் இருக்கிறது" என்று சொன்னார். நல்லது, அவள் முழு இரவும் அங்கே கிடந்தாள். அந்த ஒப்போசத்தை பற்றின சிந்தனையிலிருந்து எனது மனதை திசை திருப்பவே முடியவில்லை. மறுநாள் நான் வெளியே சென்றேன்; பில்லி வந்தான். அவன் மீன் பிடிப்பதற்காக எங்கேயோ வெளியே சென்று, நடுராத்திரியில் வரும் போது அந்த ஓப்போசம் அங்கு படுத்துகொண்டிருந்தது. ஆகையால் நான்........ மறு நாள் சுமார் 6:30 அல்லது 7 மணி அளவில் நான் வெளியே சென்ற போது, அந்த வயதான ஒப்போசம் அங்கே தான் படுத்துக் கொண்டிருந்தது. நல்லது, நான், "அது மரித்து விட்டது என்று நினைத்தேன். மற்றும் நான் அதை இப்படி காலால் உதைத்தேன். மற்றும் நான் அதை உதைத்த போது அது சிறிய அளவில் தன் வாயின் ஓரமாக இளித்து காட்டியது. மற்றும் நான் சொன்னேன், "ஓ, என்ன" அந்த குட்டி ஒப்போசம் பால் குடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தது. நான் நினைத்தேன், "என்ன ஒரு பரிதாபம், அதற்கு அந்த பையை உள்ளே திரும்பவும் இழுப்பத்தற்கு பலம் இல்லை. 55, நல்லது எனது சிறிய மகள் ரெபேக்காவை பற்றி தெரியும், அவள் கூட்டங்களில் உட்கார்ந்து, வியாதியஸ்திருக்காக ஜெபித்து கொண்டிருப்பாள், அவள் வெளியே வந்து, "ஓ அப்பா அந்த பரிதாபமான ஒப்போசத்தை பாருங்கள்" என்று கூறினாள். நான், "அதை பார்ப்பதற்கு கொடூரமாக இல்லையா தேனே" என்று கேட்டேன். மற்றும் அவள், "என்னால் அதை பார்க்க முடியவில்லை" என்று சொல்லி, வீட்டிற்கு ஓடி விட்டாள். மற்றும் நான் என்னுடைய குகை அறைக்குள் சென்று விட்டேன், நான் உட்கார்ந்து கரங்களை இப்படி மேலே தூக்கி சொன்னேன்." ஓ, அந்த ஒப்போசத்தை இன்றைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, என்று நான் யோசித்து ,உட்கார்ந்துகொண்டு இருந்தேன். மற்றும் என்னால் ......... எதோ ஒன்று சொன்னது, "நல்லது "அவள் ஒரு உண்மையான தாய் என்று நீ நேற்று பிரசங்கித்து கொண்டிருந்தாய்." நான், "ஆமாம், எனக்கு அது தெரியும்" என்று சொன்னேன். 56. மற்றும் நான் சொன்னேன், "நான் லியோவுடனும் ஜீன்னுடனும் அந்த சிருபாலகனை ஆற்றில் தூக்கி எரிந்த பெண்ணை பற்றி சொல்லிக்கொண்டு, மற்றும் அந்த பால்காரன் வந்ததை பற்றி சொல்லி மற்றும் அந்த ஒப்போசம் எப்படி ஒரு உண்மையான தாய் என்பதை சொல்லி கொண்டிருந்தேன். அது சரிதானே" என்றேன். அந்த சத்தம் சொன்னது, நல்லது. "அது தனது குட்டிகளை பாதுகாக்க வேண்டும் என்று முயற்சிக்கிறது" என்று நீ பேசிக்கொண்டிருந்தாய்." நான் சொன்னேன், "ஆமாம்" அது _ அது சரிதான். மற்றும் நான் சொன்னேன்" நல்லது, இப்பொழுது அது பற்றி என்ன. " அது சொன்னது, "நல்லது, நான் இப்போது அவளை இங்கு அனுப்பினேன். அவள் உனது வீட்டு வாசல் படியில் ஒரு பெண்ணை போல வந்து படுத்திருக்கிறாள். தனது தருணம் எப்போது வரும் என்று உனது ஜெபத்திற்காக 24 மணி நேரமாக காத்துக்கொண்டு இருக்கிறாள். மற்றும் நீ ஒரு வார்த்தை கூட அவளிடம் சொல்லவில்லை." மற்றும் நான் சொன்னேன், "நல்லது நான்......." நான் நினைத்தேன் "யாரிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன்." நான் நினைத்தேன், "நல்லது, இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? யாரிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன்?" ஏன்? "நான் யாரோ ஒருவரிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். மற்றும் இப்போது தான் அதை உணர்ந்தேன், உங்களுக்கு தெரியுமா? மற்றும் நான் நினைத்தேன். "ஓ, கர்த்தாவே என்னிடம் பேசியது நீங்கள் அல்லவா. தயவு செய்து உம்முடைய ஏழை ஊமை ஊழியக்காரனை மன்னித்து விடவும்" என்றேன். மற்றும் நான் அந்த ஒப்போசம் இருக்கும் இடத்திற்கு நடந்து சென்றேன். நான் இதை குறித்து நியாயத்தீர்ப்பில் உன்னை சந்திப்பேன் என்றார். ஒப்போசம் மட்டுமல்ல, இதை போல மற்ற நேரத்திலும் நடந்திருக்கிறது. ஆனால்........[நாடாவில் காலி இடம் _ ஆசி] ......காரியம். 57. மற்றும் அந்த ஒப்போசம் இருக்கும் இடத்திற்கு நான் நடந்து சென்றேன், அங்கே, அவளோ உயிரற்று கிடந்தாள். நான் சொன்னேன், "பரலோகத்தின் தேவனே, "நீங்கள், வியாதியுடன் இருக்கும் மனிதர்களை பற்றிய காட்சியை வெளிப்படுத்துவீர் என்பதை நான் அறிந்திருக்கிறேன். அவர்கள் ஜெபத்துக்கு வரும்படியாக, அவர்கள் இருதயத்திலும் நீங்கள் பேசுவீர்கள். மற்றும் சகோதரன் பாஸ்வோர்த் (Bosworth) அப்படியே படுத்து கிடப்பதை பற்றின காட்சியை, அதே நிமிடத்தில் இங்கே தென் ஆபிரிக்காவில் இருந்து கர்த்தருடைய தூதனானவர் 24 மணி நேரத்திற்குள் டெலிகிராமை தட்டியதை காண்பித்து, அதை பற்றி பேசினதை அறிவேன். ஆனால் உம்முடைய பிரதான கிருபை இந்த பரிதாபமான ஊமை மிருகதிற்கும் உண்டோ? அதற்கு ஆன்மா கிடையாதே. அதற்கு வெளிப்பாடு என்பது பற்றியே தெரியாதே. ஆனால் அன்பிற்குரிய தேவன் ஜீவனுக்குரிய ஆண்டவர், முக்கியத்துவம் இல்லாத, ஒரு காசுக்குக்கு விற்கப்படும் இரண்டு அடைக்கலான் குருவிகளில் ஒன்றாகிலும் மறக்கப்படுவதில்லை, என்று கூறுவதை அறிந்திருக்கிறேன்........ இயேசு "ஒரு காசுக்கு இரண்டு அடைகலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பரம பிதாவின் சித்தமில்லாமல் அவைகளில் ஒன்றாகிலும் கீழே விழாது" என்று சொன்னார். மற்றும் இதோ அந்த வயதான ஒப்போசம், நான் சொன்னேன், "ஒரு வேளை இங்கே கிடக்கும் அந்த வயதான, சுயநினைவிழந்த ஊமை மிருகமாகிய ஒப்போசத்தை, பரிசுத்த ஆவியானவர் இங்கே வழி நடத்தியிருப்பார் என்றால், "தேவன் என்னை மன்னிப்பாராக" என்று நான் சொன்னேன். "அதன் பின்.......உங்களுக்கு வேண்டு மானால்.....மற்றும் இந்த பிரானிக்கு நான் ஜெபிக்க வேண்டும் என்று நீர் விரும்பி இதை நீங்கள் இங்கே அனுப்பியிருப்பீர் என்றால், நான் அதை அறியாத ஊமையனாக இருக்கிறேன் என்பதை அறியவும். அதனால் நான் ஜெபிக்கிறேன் தகப்பனே, இயேசுவின் நாமத்தில் இந்த தாய்க்கு சுகம் தாரும் பிதாவே" என்றேன். 58. மற்றும் தேவன் என்னுடைய நியாயாதிபதி, அந்த வயதான ஒப்போசம் அப்படியே திரும்பி, வந்து என்னை பார்த்து, எழும்பி தனது குட்டிகளை சேர்த்து கொண்டு, தனது சிறிய பைக்குள் போட்டு கொண்டு நொண்டியாகவோ அல்லது வேறெந்த பிரச்சனையும் இன்றி, எனக்கு "நன்றி ஐயா"என்று சொல்லும் வகையில் திரும்பி என்னை பார்த்து, பெருமையுடன் அந்த நிலத்தின் நுழைவு வாயில் வழியாக, நல்ல ஆரோக்கியத்துடன் சென்றது. அது என்ன? தேவனுடைய வல்லமை. அல்லேலூயா. தேவன் இயற்கையில் அரசாள்கிறார். இரவில் நட்சத்திரங்களை யார் தொங்க விடுகிறார்? எந்த அறிவியல் அதை செய்யும். யார் சூரியனை சாயங்கால வேலையில் மறைய செய்து, காலையில் உதிக்க செய்கிறார்? யார் இந்த உலகத்தை தனது பாதையில் சுழலவைக்கிறார்? தேவனுடைய வல்லமை. உனது ஆத்துமாவை அவருடைய........வைத்திருப்பது யார்?......தேவனுடைய வல்லமை. அல்லேலூயா. சாத்தானின் வல்லமை ஒரு குறிப்பிட்ட அளவு மட்டும் தான். தேவனுடைய வல்லமையோ, அளவற்றது. நான் தேவனை நம்புகிறேன். 59. நாம் ஜெபிக்கலாம். எங்களுடைய பரலோகத்தின் பிதாவே, தேவகுமாரனாகிய இயேசுவுக்காக, இந்த இரவு நாங்கள் உம்மை போற்றுகிறோம். அவருடைய இரக்கங்களுக்காகவும், எங்களுக்கு செய்த எல்லாவற்றிக்கும் அவரை ஸ்தோத்தரிக்கிறோம். ஆசீர்வதிக்கபட்ட வேதாகமத்தின் பழைய சாட்சிகளுக்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். இந்த அன்புள்ள பழைய, கருப்பு உரைபோட்ட வேதாகமம், தொண்டு தொட்ட காலங்களிலிருந்து, இந்த வேதாகமம் தான் இரட்சண்யர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. ஷேக்கினா மகிமையை போல உமது பரிசுத்த ஆவியானவர் அசைவாடிக் கொண்டிருப்பதற்காக உமக்கு நன்றி தேவனே. மனிதர்கள் அந்த வேதாகமத்தை திறந்து, அதன் முகத்தை பார்த்து, பரிசுத்தத்திற்குள் பரிசுத்தம் அடைந்து, சர்வவல்லமையுடைய தேவனின் பிரசன்னத்தில், ஷேக்கினா மகிமையின் கீழ், அந்த பிளவுபட்ட திரையை கடப்பார்களாக. ஓ, தேவனுடைய நாமத்திற்கு மகிமை. உம்முடைய வல்லமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். மற்றும் இந்த இரவு, சர்வல்லமையுடைய தேவனே இந்த மேடைக்கு, உம்முடைய அப்பிரயோஜனமற்ற ஊழியக்காரன் அருகில் வந்து இந்த உலகத்தில் நீர் இருந்த போது செய்தவற்றை செய்யும், அதனால் ஜனங்கள் மனிதனாலோ அல்லது அறிவியலினாலோ அதை உண்டாக்க முடியாது என்று அறிவார்கள். அது தேவனுடைய வல்லமையால் மட்டும் தான் வர முடியும். மலர்களை மலர செய்வது யார்? இளஞ்சிவப்பு நிற ரோஜா பூவை ஒன்றிலும்_ மஞ்சள் நிற ரோஜா பூவை மற்றொன்றிலும், மலர செய்வது யார்? யார் வானத்துக்கு வர்ணம் பூசுகிறார். இலையுதிர் காலத்தில் யார் ஒரு தூரிகையை கொண்டு பனியை வெள்ளை நிறத்தில் பூசி, இலைகளை சிவப்பு நிறமாகவும், மஞ்சள் நிறமாகவும் வர்ணம் பூசுகிறார். அல்லேலூயா. நித்தியத்தின் ஆண்டவராகிய தலைவரின் ஒரே வார்த்தையில் அவை யாவும் உண்டாக்கப்பட்டது. அவர் தான், மரண இருளின் பள்ளதாகிலே இருக்கும் வியாதியஸ்தரை எழுப்புகிறார். தேவன் மாத்திரம் தான். பிதாவே, உமது மகிமைக்காக, சுகவீனமாக இருப்பவர்களை சுகப்படுத்துமாறு நான் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். 60. நான் உங்களை இவ்வளவு நேரம் தக்க வைத்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன். இராஜாவின் பிரசனத்தில் நாம் இருக்கிறோம் என்று சற்று நினைத்தால், ஓ நான் அவரை நேசிக்கிறேன். இந்த பழைய பாடலை பாடி இருக்கிறீர்களா? அல்லேலூயா, அல்லேலூயா மகிமை குறையாத பிளவு பட்ட திரையை கடந்துவிட்டேன். அல்லேலூயா, அல்லேலூயா நான் இராஜாவின் பிரசன்னத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன். அல்லேலூயா, மகிமை தவறாத பிளவுபட்ட திரையை கடந்துவிட்டேன், அங்கே தேவனுடைய ஷெக்கினா மகிமை பிரசன்னத்தில், கெட்டுப்போகாமல், உலகத்தோடு இணைக்கபடாமல், மற்றும் விசுவாசியை பிரித்து, அவனை பரிசுத்தபடுத்தி, உலகத்துக்குறிய காரியங்களிலிருந்தும், உள்ளத்திலுள்ள எல்லா சந்தேகங்களிலிருந்தும், இருளிலிருந்தும் விடுவித்து, ஒரு தூய்மையான இருதயத்தை உண்டாக்குகிறார். தேவன் தம்முடைய சட்டதிட்டங்களை ஒரு முறை எழுதி அதை பேழையின் அடியிலுள்ள மேஜை மீது வைக்கிறார். மற்றும் இந்த நாளில், ஷெக்கினா மகிமையில், இரக்கத்தின் இருப்பிடத்தின் கீழ் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதனுக்கு, தேவன் அவரது சட்டங்களை அவனது இருதயத்தில் எழுதி, அதை பாதுகாக்கிறார். மீண்டும் நான் துவங்க வேண்டும் என்று விரும்பவில்லை. ஆமென், இராஜவின் பிரசனத்தில் நாம் வாழமுடியும் என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். 61. சில K, I, அல்லது J, அல்லது.....அட்டைகள் உள்ளன என்று நம்புகிறேன். K ஜெப அட்டைகள் யாரிடமாவது உண்டோ? நான் சரியாக இருக்கிறேனா என்று பார்க்கட்டும். நல்லது. அப்போது, அதில் இருந்து எங்கேயாவது சில ஜனங்களை மேலே கூப்பிடுவோம். நாம் பார்கலாம் . அதிக பேர்கள் வேண்டாம். பார்ப்போம், யாருக்காவது K 85 ஜெப அட்டை வைத்திருக்கிறீர்களா? உங்கள் கரங்களை உயர்த்தவும்? நன்றாக பார்த்து உங்களுக்கு K 85 அட்டையா என்று பாருங்கள். ஆமாம் அதோ அந்த பெண்? அது நல்லது. 86,? உங்கள் கைகளை உயர்த்துவீர்களா? K 86? நல்லது, K 87 இருக்கிறீர்களா? 87 நல்லது, 88, நேரே இங்கே வாருங்கள், 89, யாரிடம் 89 உள்ளது? பெண்ணே இங்கே உங்களிடம் 89 உள்ளதா? 89 யாரிடம் இருக்கிறது? உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா? உங்களால் முடியவில்லை என்றாள், உங்கள் பக்கத்தில் உள்ளவரிடம், உண்டோ என்று பார்த்து அவர்களின் கரத்தை உயர்த்த சொல்லவும். நல்லது 90? நல்லது, இங்கே இந்த பெண்ணிடம் உண்டு. 91, 92, 93,94,95,96,97,98,99,100. யாரிடம் 100 வது அட்டை உண்டு? கரத்தை உயர்த்தவும் K 100 எல்லாம் சரி. இப்போது, இதை நடத்துவோம் என்றால் துவங்கலாம். அடுத்தது J அல்லது I என்று நான் நம்புகிறேன். .அதிலிருந்து சிலதை துவங்கலாம். 62 ஒ, நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா [சபையார், "ஆம்" என்று சொல்கிறார்கள் _ ஆசி] அவர் அற்புதர் அல்லவா? நாங்கள் ஒரு சிறிய பாடலை பாடுவோம். பிதாவின் மேல் விசுவாசம், குமாரனில் விசுவாசம், பரிசுத்த ஆவியில் விசுவாசம், மூன்றும் ஒருவரில். பிசாசுகள் நடுங்கும், பாவிகள் விழிப்படைவார்கள், யெகோவாவின் மேல் உள்ள விசுவாசத்தை எதினாலும் அசைக்க முடியுமா. ஆமென். சாத்தானுக்கு அந்த பழைய யுபிலி பாடலை பிடிக்காது. நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பாடலாம் வாருங்கள். பிதாவின் மேல் விசுவாசம், குமாரனில் விசுவாசம், பரிசுத்த ஆவியில் விசுவாசம், மூன்றும் ஒருவரில். பிசாசுகள் நடுங்கும், பாவிகள் விழிப்படைவார்கள், யெகோவாவின் மேல் உள்ள விசுவாசத்தை எதினாலும் அசைக்க முடியுமா. 63. ஆமென். பிசாசின் கண்களுக்கு நேரே, நரகத்தின் கட்டுகளை, அசைக்கவும். அது சரியா. யார் எப்படிபட்டவர் என்று தேவன் அவர்களுக்கு அறிவிப்பார். சகோதரன் குரோட் (Groat) இங்கே இருக்கிறீர்களா? நான் அந்த பாடலை எங்கே கற்றுக்கொண்டேன் என்று தெரியுமா? ஹென்றி குரோட் இந்த கட்டிடத்தில் இருக்கிறீர்களா? கரங்களை உயர்த்தவும். அவர் எங்கே இருக்கிறார்? நான் இன்று அவரை பார்த்தேன், ஏன் இங்கே எனது பின்னால் அவரை பார்த்தேன். சோள காட்டில் நாம் இருவரும் அதை சேர்ந்து பாடியதை, ஞாபகம் இருக்கிறதா? என்ன, என்ன ஒரு அற்புதம். அவருடைய தகப்பனார் எனக்காக ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார், நான் இதை சொல்ல வேண்டியதாக இருக்கிறது. நான் இன்று சபையில் அதை சொன்னேன். அவருடைய தகப்பனார் அசல் ஒரு நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் போல இருந்தார், கொஞ்சம் மீசை இருந்தது. எனக்கு தெரியாது. அவர் இங்கே எங்கேயாவது இருக்கிறாரா? இதற்காக அவர் என்னை மன்னிப்பார் என்று நம்புகிறேன். அவர் என்னுடைய பட்டணத்தில் இருந்தார். உங்களுக்கு தெரியுமா, அது மற்ற எல்லா பட்டணங்களை போலவே இருந்தது. அங்கே ஒரு இளம் பெண் ஒரு கடையில் இருந்து வந்தாள், அவள் ஒழுக்க கேடான உடையை அணிந்திருந்தாள். சிறிய பழைய உடை, அது இங்கேயும் மற்ற எல்லா இடத்திலேயேயும் அந்த அநாகரீகமான உடையை உடுத்தி இருப்பார்கள். பெண்களே, சகோதரிகளே கவனியுங்கள். தேனே உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். உங்கள் மேல் உள்ள இது என்னவென்று தெரியுமா? அது ஒரு அசுத்த ஆவி உங்களை அவ்வாறு செய்ய வைக்கிறது. அது சரியா? அது ஒரு பிசாசு. உங்களுக்கு அது தெரியாது. நீங்கள் ஒழுக்கக்கேடானவர்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் ஒரு தவறான இடத்திலே ஏமாற்றுகிறீர்கள். ஒரு அசுத்த ஆவியை தவிர வேறொன்றும் அதை செய்யாது. 64. மற்றும் அவள் அந்த ஆடை அணிந்து கொண்டு வெளிய வந்தாள், மேலும் சிறிய சகோதரன் குரோட், ஒரு கேலிபேசுபவர். அவர் சொன்னார். "ஓ" "ஒ" "சகோதரியே நீங்கள் உங்கள் பாவாடையை அணிய மறந்துவிட்டீர்கள் போலும்." [சகோதரன் பிரன்காம் ஒரு கேலி சிரிப்பை செய்து காட்டுகிறார்_ ஆசி] என்னை அந்த சோளக்காட்டுக்கு அழைத்து சென்று, என்னோட கூட ஜெபித்துக் கொண்டிருந்தார், மற்றும் அவர் தனது கரங்களை என் மீது போட்டு ஜெபிக்க உட்கார்ந்தார். அவர் சொன்னார், "அப்பா பிதாவே, இங்கே வந்து, சகோதரன் பிரன்ஹாமை சுகமாக்கும்" என்று சொன்னார். அப்பா பிதாவே. சகோதரன் குரோட் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? அவர் இந்த இடத்தில் எங்கேயோ இருக்கிறார். ஓ, அதோ அவர் பின்னால் கரங்களை உயர்திக்கொண்டு இருக்கிறார். சோளக்காட்டில் அந்த நாள் நினைவு இருக்கிறதா? ஆமென். சகோதரன் குரோட் அதை செய்தார். ஆமென். ஓ, அவர் அற்புதமானவர். நான், இன்று இரவு நிஜமாகவே நன்றாக உணருகிறேன். அவ்வளவு பக்தி பரவசமடைகிறேன். ஆமென். ஒவ்வொருவரும் அவரை நேசியுங்கள்? மற்றும், இப்போது அது பற்றி என்ன சகோதரர்களே. அந்த விளக்குகளின் தரம். ஆனால் நீங்கள் அதை.......அந்த ஜெப வரிசையில் உள்ளவர்கள், வரிசையில் நிற்கிறார்களா? சகோதரன் ரஸ்முஸன் (Rasmussen) நீங்கள் யாராக இருப்பினும், அவர்களை வரிசையில் நிற்கவைக்கிறீர்களா? எல்லாம் சரி. சகோதரன் வுட், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நீங்கள்.......எனக்கு உதவி செய்வீர்களா? பில்லியை என்னால் காணமுடியவில்லை. உங்களால் முடியும் என்றால், எனக்கு உதவி செய்வீர்களா? நல்லது. 65.நான் இப்போது ஆச்சரியபடுகிறேன்........[சகோதரன் பிரன்ஹாமுடன் ஒரு சகோதரன் பேசுகிறார்_ஆசி] ஒ, ஒருவேளை அவர்களை சீக்கிரமாக நகர செய்தால் அது பரவாயில்லை. அது ஒரு நல்ல காரியம் என்று நான் நம்புகிறேன். காரணம் அது அவ்வளவு வல்லமையுடையதாக இருக்கிறது, மற்றும் நான் பேசிக் கொண்டிருக்கும் போது, அந்த ஆட்களை சரியாக நேரே பார்க்கும்போது சிலவேளைகளில், அவர்கள் மாறி மாறி காண்பார்கள். அது நல்லது. அதை யார் செய்தார்களோ அவர்களுக்கு நன்றி. அது மிகவும் நல்லதாக உள்ளது. சில நேரத்திற்கு முன்னால் ஏன் நான் அதை நினைக்கவில்லை. கர்த்தராகிய இயேசுவே, தேவகுமாரனே, இஸ்ரவேலருக்கு செய்தது போல, இப்பொழுது காட்சியில் வரவும். நான் இப்பொழுது கண்ணியில் பிடிபட்டு இருக்கிறேன். ஆனால் தேவன் வாக்குத்தத்தம் பண்ணி இருப்பதை அறிவேன். அவர் அந்த எபிரேய பிள்ளைகளை அக்கினி சூலையில் அனுப்பும் போது, அவர் தேவன் என்பதை நிரூபிக்க அப்படி செய்தார். அவர் தானியேலை, சிங்க கெபியில் போட அனுமதித்தது எதற்கு என்றால், அவர் தேவன் என்பதை நிரூபிப்பதற்காக. அவர் லாசரூவை மரிக்க செய்து, மற்றும் அவன் உடல் கல்லறையில் அழுகுவதற்கு அனுமதித்தது, ஏனென்றால் அவர் தேவன் என்பதை நிரூபிப்பதற்காக. ஆமென். மற்றும் இன்றைக்கும் அவர் அதே போல செய்ய வல்லவர். அவர் செய்ய கூடும் அல்லவா? அவர் தேவன் என்பதை நிரூபிக்க முடியும். 66. இப்போது, என் முன்னே நின்றுகொண்டிருக்கும் இந்த பெண்ணும் நானும் முன் பின் அறியாதவர்கள். அப்படி தானே பெண்மணியே? அப்படி தான். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயமாக தெரியும் சகோதரியே; இங்கே, நம் இரண்டு பேர்களையும் பற்றி ஒருவருக்கு மட்டும் நன்றாக தெரியும். அது சரி. மற்றும் என்றோ ஒரு நாளில், நாம் இரண்டு பேரும், இந்த வாழ்கையில் செய்த எல்லாவற்றிக்கும் அவருடைய பிரசன்னத்தில், கணக்கு கொடுக்கவேண்டும். அதை பற்றி உணர்வு இருக்கிறதா? இங்கே, இப்போது ஒரு காரியம் நடந்ததை பற்றி நான் சொல்கிறேன். எதையும் சொல்வதற்கு முன்னால், கர்த்தருடைய தூதன் என்னை இங்கே அபிஷேகம் பண்ணினார். இப்போது தான் நடந்தது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அது அந்த பெண்ணை, விரைவாக தாக்கியது. உங்களிடம் ஒன்று சொல்வதற்கு முன்னால், ஏதோ ஒன்று உங்களை தாக்கியது. உங்களுக்கு தெரியுமா? அது சரியா? அது நல்லது. இப்போது, உங்களை முன் பின் அறியாதவன், உங்களை பற்றி ஒன்னும் அறியாதவன், எனது வாழ்க்கையில் உங்களை பார்த்ததே கிடையாது, தேவன் ஒரு வேளை உங்களுக்கு என்ன பிரச்சனை உண்டு என்று காண்பித்தால், அல்லது எதற்காக நீங்கள் இருக்கிறீர்கள், என்று காண்பித்தால், இயேசுவை ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் ஏற்றுகொள்வீர்கள்? சபையார் அதை செய்யவீர்களா? இப்போது நான் அவருடைய பிரசன்னத்தில் இருக்கிறோம். மற்றும் அவர் நம்மிடம் ஒரு வியாதியை எடுத்து போடலாம் அல்லது ஒரு வியாதியால் தாக்கப்பட்டு, மரித்தும் போகவும் செய்யலாம். அவர் தேவன், ஆகையால் அவருடைய பிரசன்னத்தில் நாம் பயபக்தியோடே இருக்கனும். அதை நம்புகிறீர்கள் அல்லவா? ஆகையால் நான் அந்த பெண்ணை பார்க்கிறேன். நீங்கள் நரம்பு தளர்ச்சியால் பாத்திக்கபடுகிறீர்கள். மிகுதியாக அவதிப்படுகிறீர்கள். மேலும் நீங்கள் ஏதோ ஒன்றிற்காக மருத்துவரிடம் சென்றீர்கள் என்பதை பார்க்கிறேன். இது - அது ஒரு தொற்று நோய். உங்களுக்கு ஒரு தொற்று நோய் உண்டு. அந்த தொற்று உங்கள் மார்பகத்தில் உள்ளது. அது சரியா. மற்றும் அது இடது மார்பகத்தில் உள்ளது. மற்றும் அது எதினால் ஆகிறது என்று மருத்துவருக்கே தெரியாது, மற்றும் அதை உண்டாக்கும் காரணம் என்னவென்று தெரியவில்லை என்று சொல்கிறார்? அது உண்மை. 67. இப்போது, அது நானாக பேசினது கிடையாது. அது என்னுடைய உதடுகள் பேசிய வார்த்தைகள். அது என்னுடைய கட்டுக்குள் இல்லை. ஆனால் என்ன. அது உண்மையை சொல்லிற்று. அது சரிதானே? இப்போது, இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தாரா? ஞாபகம் கொள்ளுங்கள் நண்பர்களே. அது தான் இயேசு, இந்த உலகத்தில் இருந்த போது செய்தார். இன்றிரவு அது இயேசுவாக இருக்கிறார். அவர் இந்த உலகத்தை விட்டு எடுபடும் போது, கடைசியாக சொன்ன வார்த்தைகள். அவர் சொன்னதை நான் காண்பிக்கிறேன். அவர் தமது சீஷர்களை பெத்தானியா வரைக்கும் அழைத்து சென்று அவர்களை ஆசிர்வதித்து. சொன்னார். "நீங்கள் உலகமெங்கும் சென்று (அது சிக்காகோவையும் குறிக்கிறது, அப்படிதானே) சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கபடுவான். விசுவாசியாதவனோ, ஆக்கினைகுள்ளாக தீர்க்கப்படுவான். மற்றும் விசுவாசிக்கிறவனால் ஆகும் அடையாளங்கள், உலகத்தின் முடிவு பரியந்தம் பின்தொடரும்." எவ்வளவு காலம்? "உலகத்தின்..........இந்த சுவிசேஷம்........எவ்வளவு காலம்? அப்போஸ்தலர்களின் காலம் வரைக்குமா? உலகத்தின் முடிவுவரை "என் நாமத்தினால் பிசாசுகளை துரத்துவார்கள், நவமான பாஷைகளை பேசுவார்கள், சர்ப்பங்களை எடுப்பார்கள், சாவுக்கே துவான யாதொன்றக் குடித்தாலும் அது அவர்களை சேதப்படுத்தாது, வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அப்போது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்றார். அது தான் அவர் சொன்னார். நீங்கள் அதை நம்புகிறீர்களா? அப்போது அவர் இங்கு நின்றுகொண்டு இருப்பதை.........நீங்கள் நம்புகிறீர்களா? நான் அதை நம்புகிறேன். தேவன் எனக்கு ஒருவாக்குத்தத்தை கொடுத்தார், உங்கள் மேல் எனது கரங்களை வைத்து ஜெபித்தால் நீங்கள் சுகமாகுவீர்கள் என்று அதை நீங்கள் நம்புவீர்கள் என்றால் நீங்கள் சுகம் பெறுவீர்கள். அது சரிதானே. அப்படி என்றால் முன்னே வாருங்கள். எங்கள் பரலோகத்தின் பிதாவே, இந்தப் பெண்மணி மீது என் கரங்களை வைத்துக் கொண்டு, அவள் தனக்கு என்ன நேர்ந்தது என்ற தெரியாமல், மற்றும் மருத்துவர்களும் அவளிடத்தில் ஒன்றும் சொல்லாமல் இருக்கும் பட்சத்தில், ஒரு நிர்பந்த்தத்தின் அடிப்படையில், தேவனே நீர் அவள் மேல் இரக்கம் வைத்து, அவளுக்கு நல்ல சுகத்தை தர வேண்டும் என்று ஜெபிக்கிறேன். அந்த பெண்மணியின் உயிரை எடுப்பதற்காக முயன்ற அந்த சாத்தானை நான் கடிந்துக் கொள்கிறேன். மற்றும், சாத்தானே அவளை விட்டு வெளி வரும்படியாக உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் கட்டளையிடுகிறேன். நீ தோற்கடிக்கபட்டவன். மரணத்தின் ஆவியே, நீ தோற்கடிக்கப்பட்டாய். உயிர்தெழுந்த தேவனை நாங்கள் பார்க்கிறோம். அவர் இங்கே இருக்கிறார். மற்றும் விசுவாசத்தின் கண்களால் இந்த சகோதரிக்காக, இந்த நிழலுக்கு அப்பால் சூரியன் நல்ல சுகத்தை பிரகாசித்து கொண்டிருப்பதை நாங்கள் பார்க்கிறோம். அவருடைய கட்டளையால் இதை இயேசுவின் நாமத்தில் செய்கிறோம். ஆமென். இப்போது செல்லுங்கள். நீங்கள் சுகமடைய போகிறீர்கள். ஆமென். தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. 68. நல்லது, நீங்கள் இங்கே வருவீர்களா? பெண்ணே, விசுவாசம் வையுங்கள். நீங்கள் வரும் போது சகோதரியே, உங்கள் முழு இதயத்தோடு அவரை நம்புங்கள். பொதுவாக ஓ, நான்_ நான்.....சோர்வடையும் போது, நான் தோய்ந்த பிறகு, அது தான் மிக சிறந்தது, ஏனென்றால் வில்லியம் பிரான்ஹாம் போய்விட்டார். அதற்கு பிறகு இயேசுவுக்கு பேசமுடியும். எனக்கு உங்களை தெரியாது. நீங்கள் வல்லமையோடு, பரிசுத்தமாக இருக்கும் சிறு பெண்ணாக எனக்கு காண்கிறீர்கள். உங்களை நான் பார்த்ததே கிடையாது. ஆனால் கர்த்தருக்கு உங்களை தெரியும். உங்களைப் பார்க்கும்போது உங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இருப்பது போல தோன்றவில்லை. ஆனால் உங்களுக்கு பிரச்சனை இருக்கிறதா, இல்லையா, என்பது கர்த்தருக்கு தெரியும். அது சரிதானே? இப்போது சபையாருக்குள் யாரோ ஒருவர், பரிசுத்த ஆவியை தங்களுக்கு தள்ளிவிட்டனர். எனக்கு அது கிடைக்கவில்லை. இப்போது, உண்மையாகவே பயபக்தியாக இருங்கள். அசையாதேயுங்கள். சும்மா அமைதியாக உட்கார்ந்திருக்கவும். உங்களிடம் மீண்டும் நான் பேசட்டுமா சகோதரியே? இப்போது அந்த பெண்மணி என்னிடம் இருந்து தள்ளி செல்வதை நான் பார்க்கிறேன். அது திரும்பவும் அவளிடம் இருக்கிறது. அவள் மிகவும் பயந்து இருக்கிறாள். ஏனென்றால் அவள் கவலையோடு இருக்கிறாள். அவள் ஏதோ ஒன்றை குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது, அந்த அறுவை சிகிச்சை புற்றுநோய்க்குரியது. அது முற்றிலும் வெற்றிகரமாக முடியவில்லை. ஆகையால் நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் கவலைப்படாதீர்கள். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். அவரே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறார். நீங்கள் அதை நம்புகிறீர்களா? ஒரு கணம் இங்கே கிட்டே வாருங்கள். பரலோகத்தின் பிதாவே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே இந்த பெண்மணியை நான் ஆசீர்வதிக்கிறேன். மற்றும் அவள் சுகம் பெறுவதற்காக ஜெபிக்கிறேன். தேவனுடைய வல்லமையினால் அவளை சுகமாக்கி, ஆரோக்கியமடைய செய்யும். ஆமென். என் சகோதரியே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் சென்று, உங்கள் முழு இருதயத்தோடும் அவரை விசுவாடியுங்கள். நல்லது. 69. இப்போது எப்படி இருக்கிறீர்கள்? அதே இருண்ட ஆவி. எல்லோரும் பயபக்தியோடு இருங்கள். தயவுகூர்ந்து, இங்கும் அங்குமாக அசையாதேயிங்கள். பாருங்கள், இந்த காரியம் ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு கடந்து செல்கிறது. மற்றும், நான் எதற்காக உங்களுக்கு அதை செய்து கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? அதை உணரவில்லையா: இங்கிருந்து விடுபட்டு சென்ற புற்றுநோய் வேறு எங்கயோ செல்கிறது. அது நிஜம். மற்றும் அதை நான் பிடித்து வைக்க முடியாது. நீங்கள் அசைந்து கொண்டிருப்பீர்கள் என்றால், அது எங்க சொல்கிறது என்று எனக்கு சொல்ல முடியாது. அது ஒரு இருண்ட நிழலாக நான் பார்க்கிறேன். .........இந்த பெண்மணி மீது சரியாக இப்போது, ஒரு புற்று நோய் தொங்கிக்கொண்டு இருப்பதை நான் அறிகிறேன். அது ஒரு இருண்ட நிழல். அந்த நிழல் அவளை விட்டு நீங்கும் என்றால் .........என்ன தவறு நடந்த இருக்கிறது என்று எனக்கு எப்படி தெரியும்? அது ஒரு காட்சியின் மூலமாக தெரியும. மற்றும் அந்தப் பெண்ணின் தலைமீது ஒரு இருண்ட மரணம் தொங்கிக்கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன். மற்றும் கர்த்தர் மட்டும் உதவி செய்யவில்லை என்றால் அவள் நிச்சயமாக மரித்து விடுவாள். நல்லது, அவன் அவளை விட்டு நீங்கும் போது அவன் கோபம் கொண்டிருக்கிறான், அவனை நீக்கி விட்டால், அவனால் முடியும் என்று நினைத்தால் அவன் வேறொரு இடத்தை பிடிப்பதற்காக சென்றுவிடுவான். அதுதான் உண்மை என்று உங்களுக்கு தெரியுமா? வேதாகம காலத்தில் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா, எந்த அதிகாரமும் கொடுக்கப்படாத பட்சத்தில், ஒருவன் திமிர்வாதத்தை உண்டாக்கிய மந்திரத்தை ஒருவனிடத்தில் இருந்து வெளியேற்றும் போது என்ன நடந்தது என்று தெரியுமா? 70. இப்போது நீங்கள் ஒரு புற்றுநோயால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். அது மரணமாக இருக்கிறது. மற்றும் தேவனால் மட்டும் தான் அதை சுகமாக்க முடியும். நீங்கள் அதை நம்புகிறீர்கள் அல்லவா? இப்பொழுது அது அப்படியே இருக்கும் போது, யாரோ ஒருவர் அசைகின்றனர். நான் உங்களிடத்தில் ஒரு கணம் பேச விரும்புகிறேன். நீங்கள் இந்த பட்டணத்தில் உள்ளவர்கள் அல்ல, நீங்கள் வேறு ஒரு பட்டணத்தில் இருந்து இங்கு வந்து இருக்கிறீர்கள். மற்றும், அது எங்கே இருக்கிறது என்று பார்க்கிறேன்........ நான் ஒரு கோபுரத்தை காண்கிறேன், அது இல்லினாய்சில் (Illinois) உள்ள ஜாலியட் (Joliet) மற்றும் உங்கள் பெயர் க்ளீன் (Klein) லியோனா கிளீன் (Leona Klein) இப்போது, நீங்கள் உங்கள் வீட்டுக்கு திரும்பி செல்லுங்கள். சென்று சுகம் அடையுங்கள். அந்த இரண்ட காரியம் உங்களிடமிருந்து அகன்று விட்டது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனிடத்தில் விசுவாசம் வையுங்கள், இயேசு கிறிஸ்துவின் உச்ச அதிகாரத்தை எப்படி அந்த பிசாசு அறிந்து கொள்கிறான்? என்னை அல்ல, அவன் என்னை வெறுக்கிறான். அவனுக்கு என்னைப் பற்றி கவலையே கிடையாது, ஆனால் நான் யாரின் சார்பாளராய் இருக்கின்றேன் என்பவரை பற்றி நினைவுகூற வேண்டும். யார் என்னை இங்கே அனுப்பினார் என்று அவன் நினைவு கூறவேண்டும். அல்லேலூயா. எப்படி இருக்கிறீர்கள். பெண்ணே உங்கள் முழு இருத்தையத்தோடு நம்புங்கள். நான் உங்களுக்கு ஒரு அந்நியன், நீங்களும் எனக்கு ஒரு அந்நியன். ஆனால் நம் மத்தியில் ஒருவர் இருக்கிறார். அவர் நம் இருவரையும் அறிந்திருக்கிறார், அவர் தான் இயேசு கிறிஸ்து. ஒருவேளை இயேசு உங்களுடைய பிரச்சனையை எனக்கு காண்பிப்பார் என்றால் நீங்கள் அவரை ஏற்றுக் கொள்வீர்களா? அதற்குப் பிறகு அவரை நம்புவீர்களா? நல்லது. சரி இந்த பக்கமாக பாருங்கள். நான் ஏன் இப்படி பார்க்க சொல்கிறேன் என்றால், வேதாகமத்தில் மோசே ஒரு வெண்கல சர்பத்தை ஏற்றினான். மேலும் இஸ்ரேவளர்களை அதை பார்த்து ஜீவிக்கும்படி சொன்னான். அது சரிதானே? அவர் செய்தார். அவர்கள் அதை பார்க்கவேண்டும். 71. பேதுருவும் யோவானும் அலங்கார வாசலில் பிரவேசித்த போது சொன்னார்கள் "எங்களை பாருங்கள்." அந்த காரணத்தினால் தான், நான் சொன்னேன் "பாருங்கள்" உங்கள் கவனம் எனக்கு தேவை படுகிறது. ஆனால் எனக்கு ஒரு நீண்ட தண்ணீர் கீற்று தெரிகிறது. மற்றும் அது..........இல்லை. நீங்கள் உங்களுக்காக இங்கே இல்லை. நீங்கள் ஒரு வயதான பெண்ணுக்காக இருக்கிறீர்கள். மேலும் அந்த பெண் இருதய பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். மேலும் அவர்கள் உன்னுடைய தாய். மேலும் அவர்கள் இந்த நாட்டில் இல்லை. அவர்கள் அந்த மதம் நிமித்தம் உபத்திரவபடுத்தும் நாட்டை சுற்றி எங்கேயோ இருக்கிறார்கள். அங்கே சுற்றி எங்கேயோ இருக்கிறார்கள். நான் ஒரு ரஷிய நாட்டை சேர்ந்த ஒரு படை வீரன் அணிவகுத்துக் கொண்டிருப்பதை பார்க்கிறேன்.......அவள் ரஷ்யா கிட்ட இருக்கிறாள். அது சரியா? சரியாக இப்போது இருதய நோயால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறாள். தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து அவர்களை சுகமாக்குவார். நீங்கள் அதை நம்புகிறீர்களா? பின் உங்கள் முழு இருதயத்தோடும் அதை நம்புங்கள். தேவகுமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆசிர்வதிக்கப்படுவாராக. அல்லேலூயா. விசுவாசம் வையுங்கள். சந்தேகிக்க வேண்டாம். வாருங்கள் பெண்மணியே, விசுவாசித்து வாருங்கள். நான் தேவனுடைய ஊழியக்காரன் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? தேவனிடத்தில் விசுவாசம் வையுங்கள். உங்களை எனக்கு தெரியாது. ஆனால் இங்கே ஒருவர் இருக்கிறார் என்பதையும், அவருடைய பிரசனத்தில் நாம் இருவரும் இருக்கிறோம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அவருக்கு நம்மை பற்றி தெரியும். இப்போது, நீங்கள் உங்கள் கண்களுக்காக நான் ஜெபிகுமாரு கேட்கிறீர்கள். உங்களுக்கு கண் பிரச்சனை உண்டு. மற்றும் மீண்டும் நான் அதை பார்கிறேன். இதோ ஒரு பரந்த தண்ணீரை பார்கிறேன். மற்றும் - மற்றும் மலைகள் அதிகம் கொண்ட வேறொரு நாட்டை பார்கிறேன். அது மிகவும் அழகாக உள்ளது. அது ஏரிகள் நிறைந்த தேசமாக உள்ளது. மேலும் அங்கே உங்களை போலவே ஒருவர் இருப்பதை நான் பார்கிறேன். அது உங்கள் சகோதரி. அவள் ஒரு இரத்த சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அது ஒரு இரத்த நோய். மற்றும் அது ஸ்வீடன் நாடு? அது சரிதானே? .மற்றும் அந்த கைக்குட்டை அவளுக்கு தான். நல்லது, நீங்கள் சென்று அதை அவளுக்கு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அனுப்பி வையுங்கள். அவள் சுகம் பெற்றுக்கொள்ளட்டும். அல்லேலூயா. 72. தேவனிடத்தில் விசுவாசமாய் இருங்கள், நீங்கள் நம்புகிறீர்களா? இயேசு சொன்னார் "விசுவாசிக்கிறவனாலே எல்லாம் ஆகும். நீங்கள் நம்புவீர்கள் என்றால் எல்லாம் கூடும். "நீங்கள் நம்புகிறீர்களா? விசுவாசம் வையுங்கள். சிவப்பு தொப்பியை அணிந்து அங்கே உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கும் சகோதரியே, ஆமாம் அப்பொழுதே உங்கள் விசுவாசம் என்னை தொடர்பு கொண்டது. பாருங்கள்? இவ்வளவு கொடூரமான நொண்டிக்கு காரணமாக இருந்த அந்த மூட்டழற்சி நீங்கி போயிற்று. இங்கே நீங்கள்..........கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இங்கு கீழே, சரியாக மூவர் உட்கார்ந்திருக்கும் இந்த வரிசையில் உள்ள உங்களுக்கும் மூட்டழற்சியும், பித்தப்பை கோலாரும் உண்டு. நீங்கள் நம்புவீர்கள் என்றால் ஒரு வேளை சுகம் பெறலாம்.....அது சரியா சகோதரியே. உங்கள் விசுவாசம் தேவனோடு தொடர்பு கொண்டது. அந்த பெண்மணிக்கு சுகம் கிடைத்தபோது அது உங்களையும் தாக்கியது. நீங்கள் சுகமானீர்கள். இயேசு கிறிஸ்து உங்களை முழுமையாக்கினார். அல்லேலூயா. தேவனுடைய நாமம் மகிமைபடுவதாக. தேவனிடத்தில் விசுவாசம் வையுங்கள். இயேசு சொன்னார் "நீங்கள் விசுவாசித்தால் என்னால் முடியும்." நீங்கள் நம்புகிறீர்களா? உங்கள் முதுகு வலியில் இருந்து நீங்கள் சுகமானீர்கள் என்று நம்புங்கள். மற்றும் .... ......?.....நீங்கள் அந்த நாற்காலியில் உட்காரும் போது சுகம் பெற்றீர்கள்.ஆமென். ஆகையால் சந்தோஷத்தோடே செல்லுங்கள். அவ்வளவு தான். "கர்த்தருக்கு நன்றி" என்று சொல்லிக்கொண்டு இருங்கள்." 73. வாருங்கள் பெண்மணியே. இரத்த சம்பந்தமான நோய்களும் மற்ற காரியங்களையும் சுகப்படுத்துவது தேவனுக்கு லேசான காரியம். நீங்கள் அதை நம்புகிறீர்களா ஆமாம் நம்புகிறீர்கள். வாருங்கள், நீங்களும் நானும் கல்வாரிக்கு சென்று இரத்த மாற்றை செய்யலாம். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே என்னுடைய சகோதரியை அளக்களிக்கிர பிசாசை நான் கடிந்துக்கொள்கிறேன். இயேசுவின் நாமத்தில் அவன் அவளை விட்டு வெளியே வரட்டும். ஆமென். கடந்து செல்லுங்கள் சகோதரியே. தேவன் உங்களை முழுமையாக்கினார் என்று களிகூர்ந்து நீங்கள் எதை கேட்டீர்களா அதை பெற்றுக்கொண்டீர்கள் என்று நம்புங்கள். உங்களுடைய சிறு நீரகத்தின், பிரச்சனை நீங்கி போய்விட்டது சகோதரியே. செல்லுங்கள்.......?........ நம்புங்கள். விசுவாசம் வையுங்கள். உங்கள் விசுவாசம் உங்களை சுகமாக்கிற்று. உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். இங்கே வாருங்கள் ஸ்திரீயே. நீங்கள் இப்படி திரும்பி பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வாயில் கை குட்டையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் அந்த ஸ்திரியை பாருங்கள். உங்களை போலவே அவர்களும் அதே மூட்டழர்சியினால் அவதிபடுகிறார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும், ஒரு கருத்த கோடு ஓடிக்கொண்டிருக்கிறது. அது மூட்டழர்சி. அது சரிதானே. ஆமென். அல்லேலூயா. இப்போது, இந்த மேடையிலிருந்து தேவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே செல்லுங்கள். விசுவாசமுள்ளவர்களாய் இருங்கள். மகிமை! தேவகுமாரன் ஜீவிக்கிறார். 74. அங்கே அந்த வரிசையின் முடிவில், கரங்களை கீழே போட்டவாறு உட்கார்ந்து ஜெபிக்கும் அப்பா உங்கள் ஜெபத்தை தேவன் கேட்டார். நீங்கள் ஜெபித்திக்கொண்டிருந்தீர்கள். நான் உங்கள் ஜெபத்தை கேட்டேன். நீங்கள் அமைதியாக ஜெபித்தீர்கள், ஆனால் அவர் உங்கள் ஜெபத்தை நான் கேட்கும்படி செய்தார். நீங்கள் சொன்னீர்கள். "தேவனே அடுத்ததாக அவர் என்னை அழைக்கட்டும். இந்த முறை அது என்னுடைய நேரமாக இருக்கட்டும். "அது நல்லது. "ஆமாம் உங்களுக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அப்படிதானே? அஹ்ஹ். அது சரி. மற்றும் நீங்கள் இந்த நாட்டை சேர்ந்தவர் கிடையாது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் ஒரு பற்றனத்தை சார்ந்தவர்கள். நான் எழுத்துகூட்டி சொன்னாள் அது யூ _ டி ....... யூட்டிகா, மிச்சிகனில் உள்ள யூட்டிகா. நல்லது நீங்கள் சுகம் பெற்றீர்கள், உங்கள் நரம்பு தளர்ச்சி நீங்கி விட்டது. வீட்டிற்கு போகலாம். உங்கள் விசுவாசம் உங்களை சுகப்படுத்தியது. அல்லேலூயா. தேவகுமாரனாகிய இயேசு ஜீவிக்கிறார், ராஜரீகம் பண்ணுகிறார். நீங்கள் நம்புகிறீர்களா? வாருங்கள் ஸ்திரீயே. அங்கே உட்கார்ந்துகொண்டு இருக்கும் போது, உங்கள் பெண்மைக்குறிய வியாதி உங்களை விட்டு சென்றதா? நல்லது, அது நீங்கிற்று. ஆமென். நீங்கள் எதை கேட்டீர்களா அதை பெற்றீர்கள். நம்புங்கள். 75. நேரே பின்னால் உட்கார்ந்துகொண்டு இருக்கும் பெண்ணே, அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சுகம் பெற்று அந்த பெண் சென்று விட்டாள்...நீங்கள் அதை நம்புகிறீர்களா? ஆமாம் உங்கள் கண்களுக்கு ஏதோ பிரச்சனை உண்டு. அப்படி தானே. அது சரி. நேரே இங்கு இடுப்பில் வெள்ளை துணியோடு இருக்கும் அந்த பெண்ணின் பின்னால், இருக்கும் பெண் மீது தேவனுடைய தூதன் நிற்பதை பார்க்கிறேன். ஆமாம், அஹ்ஹ, அஹ்ஹ அது அற்புதம் அல்லவா சகோதரனே? [ஒரு மனிதன் சொல்கிறார் "அந்த பெண்ணுக்காக ஏறெடுத்த என் விண்ணப்பத்தை அவர் இப்பொழுது தான் கேட்டார். ஆசி] ஆமென். அது நல்லது. நான் உங்களை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை பெண்ணே. பாத்ததுண்டா? இல்லை ஐயா? நான் பார்த்ததே இல்லை. ஆனால் நீங்கள் இவ்விடத்தில் உள்ளவர் கிடையாது. நீங்கள் என்னுடைய மாநிலத்தை சேர்ந்தவள். இந்தியானாவை சேர்ந்தவள். அது சரியா? ஆண்டர்சன், நீங்கள் இந்தியானாவில் அந்த இயந்திரங்கள் உள்ள இடத்தில் உள்ளவர். உஹ் அஹா அல்லேலூயா. 76. உங்கள் கிட்ட உட்கார்ந்துகொண்டு இருக்கும் அந்த பெண்ணுக்கு நெஞ்சு வலியால் அவதிப்படுகிறார். அது சரியா. உஹு நீங்கள் இண்டியானாவில் உள்ள மன்ச்சியை சேர்ந்தவர் உடனே இப்போது ஆர்பரித்துகொண்டு வீட்டிற்கு ஓடுங்கள். அல்லேலியா. நீங்கள் சுகம் பெற்றதாக நம்புகிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீங்கள் சுகம் பெற்றுக்கொள்ளலாம் .?......[ஜெப வரிசையில் உள்ள நபரிடம் சகோதரன் பிரன்ஹாம் பேசுகிறார் _ ஆசி] விசுவாசத்தோடு செல்லுங்கள். ஒரு நிமிடம் இங்கே வாருங்கள் ஸ்திரியே. நீங்கள் சுற்றி திரும்பி பார்க்கும்படி கேட்கிறேன். நீங்கள் வியாதியில் கஷ்டபடுகிறது போல 70% ஜனங்கள் இந்த வேதனையை அனுபவிக்கிறார்கள். அது சரிதானே. எத்தனை பேர்கள் நரம்பு தளர்ச்சியால் அவதிப்படுகிறீர்கள். கரங்களை உயர்த்தவும்? பாருங்கள் எப்படி அந்த ஆவிகள் இழுத்து கொண்டிருக்கிறது? இயேசு உங்களுக்கு சுகம் அளிப்பதற்காக இங்கே இருக்கிறார் என்று எத்தனை பேர்கள் நம்புகிறீர்கள். கரங்களை உயர்த்தவும்? இப்போ வீட்டிற்கு செல்லவும், உங்கள் வியாதி நீங்கிற்று. ஆமென் . கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பர். 77. நாம் சொல்லுவோம்........."கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" [சபையார் சொல்லுகிறார்கள் "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" ஆசி ] நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன் ஸ்திரியே, எந்த நேரத்தில் அவர்களிடம் கேட்டேனோ, அதே காரியம் தான் உங்களிடம் இருந்தது. மற்றும் நான் அதை சொன்ன போது ஏதோ ஒன்று உங்கள் மீது வந்தது. வந்தது அல்லவா? நல்லது இப்பொழுது அந்த நரம்பு காரியத்தில் இருந்து நீங்கள் சுகம் பெற்று விட்டீர்கள். அது மாத விடாய் நின்றுபோனதால் நம்பிகையோடே வீட்டிற்கு செல்லுங்கள். என்ன யோசிக்கிறீர்கள் ஸ்திரீயே? உங்கள் முழு இருதையத்தோடே நம்புகிறீர்களா? எனக்கு உங்களை தெரியாது. உங்களை பார்த்ததே இல்லை. தேவன் ஏதோ ஒன்று செய்தார். ஆமென். நீங்கள் இங்கே வேறொருவருக்காக ஜெபித்து கொண்டிருந்தீர்கள். அது உங்களுடைய நண்பர். நான் ஒரு பெரிய ஆலயத்தையும், சிறு சிறு விக்கிரகங்களுக்குள்ளும், அது போன்றவைகளையும் பார்க்கிறேன். உங்கள் நண்பர் கத்தோலிக்கத்திலிருந்து மாறியவர். மற்றும் அவளுக்கு புற்று நோய் உள்ளது. மற்றும் அந்த புற்று நோய் முகத்தில் உள்ளது. எல்லாம் சரி. அந்த கைக்குட்டையை எடுத்து அவளுக்கு கொடுத்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகம் பெற்றுக்கொள்ளட்டும். நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியென்றால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் காலில் நின்று, நான் ஜெபிக்கும் போது உங்கள் சுகத்தை பெற்றுக்கொள்ளுங்கள். சர்வ வல்லமையுள்ள தேவனே, நான் ஒவ்வொரு பிசாசையும் வெளியே அனுப்புகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவன் இந்த இரவு, இந்த ஜனங்களை விட்டு வெளியே போகட்டும். சாத்தானே, உன்னை கண்டனம் பண்ணுகிறேன். தேவன் பிரசன்னமாகி நின்றுக்கொண்டிருப்பதை கண்கள் விசுவாசத்தில் பார்க்கிறது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்களை விட்டு வெளியே வா, சாத்தானே. கரங்களை உயர்த்தி அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள். 2 THE POWER OF GOD தேவனின் வல்லமை 5